Connect with us
nayanthara

Cinema News

தற்கொலை செய்து கொள்ள நினைத்த நடிகர்… நயன் செய்த சம்பவத்தால் மனம் மாறிய ஆச்சரியம்..

Nayanthara: நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் சாதித்ததை விட சறுக்கிய வரலாறுதான் அதிகம். ஒவ்வொரு முறையும் அவர் தோற்கும் போதும் அதை தாண்டி மீண்டும் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருப்பதை தான் பல வருடங்களாக ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நிறைய கொடுமைகளில் இருந்து தப்பித்து இன்று தனக்கான நல்ல வாழ்க்கையை நயன்தாரா அமைத்துக் கொண்டிருக்கிறார்.

அதுபோலவே தன்னுடன் பணியாற்றும் பிரபலங்களிடமும் அவர் தன்னுடைய தைரியத்தை சொல்லி அவர்களையும் அப்படியே நடத்த முயற்சி செய்வாராம். இப்படி நயன்தாரா செய்த ஒரு விஷயத்தால் பிரபல நடிகர் தம்பி ராமையா  தற்கொலை செய்து கொள்ள நினைத்தவர் மனம் மாறியதாக தன்னுடைய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: எல்லா நடிகர்கள் செய்த விஷயம்… ரஜினிகாந்த் மட்டும் செய்யாத ஒரே சம்பவம்… இத கேளுங்க!..

தமிழ் சினிமாவில் எழுத்தாளராகவும், நடிகராகவும் செயல்பட்டு வருபவர் தம்பி ராமையா. இவரின் தந்தை திமுக பற்று கொண்டவர். கவிதை எழுதுவதில் வல்லவராக இருந்தார். அவரைப் போலவே தம்பி ராமையாவும் நிறைய கவிதைகள் எழுதி தன்னுடைய தாயிடம் காட்டுவதை வழக்கமாக வைத்திருப்பாராம்.

தம்பி ராமையாவிற்கு அவருடைய அம்மா தான் ரொம்ப பிடிக்குமாம். இது அவர்களுடைய மொத்த குடும்பத்திற்குமே தெரிந்த விஷயம். ஒவ்வொரு முறை அம்மாவிடம் கவிதை எழுதும்போது உன்னுடைய மூச்சுக்காற்று இருக்கும் வரை நான் வாழ்ந்தால் போதும் என எழுதிக் கொடுப்பதையும் செய்து இருக்கிறார்.

இப்படி இருக்கும் நிலையில் அவருடைய அம்மா ஒரு நாள் தவறிவிட்டார். அம்மா இல்லாத உலகத்தில் தன்னால் வாழ முடியாது என நினைத்த தம்பி ராமையா உடனே தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கிறார். மகளுக்கு மட்டும் திருமணம் முடிந்திருக்க நிலையில், மகன் தனியாக இருக்கிறார். இருந்தும் அவர்கள் தங்களை பார்த்துக் கொள்வார்கள் என நம்பிக்கையில் இருந்தாராம்.

இதையும் படிங்க: படம் பார்த்த நமக்கு இது பத்தல!.. மொக்க படம்?.. சொர்க்கவாசலுக்கு ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!..

அவர் கால் செய்து பேச குழப்பத்தில் இருந்தவருக்கு நிதானம் பிறந்திருக்கிறது. அதன் பின்னரே தன்னுடைய தற்கொலை முடிவை விட்டதாக குறிப்பிட்டிருக்கிறார். இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் தற்கொலை செய்யக்கூடாது என எழுதிய நானே அந்த நிலைக்கு தள்ளப்பட்டேன். நயன்தாரா கால் செய்யாமல் இருந்திருந்தால் என்னுடைய வாழ்க்கை என்ன ஆகி இருக்கும் என்று சொல்ல முடியவில்லை.

thambi ramaiah

thambi ramaiah

சமீபத்தில் கூட என்னுடைய மகன் திருமணத்தில் இதை நினைத்து பார்த்தேன். நான் தற்கொலை செய்து கொண்டு போய் இருந்தால் என்னுடைய பிள்ளை திருமணத்தை பார்த்திருக்க முடியாதே என கலங்கினேன் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top