Connect with us

Cinema News

அர்ஜூன் இன்னைக்கும் இவ்ளோ ஃபிட்டா இருக்காரே… இதான் ரகசியமா?

தமிழ்த்திரை உலகில் ‘ஆக்ஷன் கிங்’னு சொன்னாலே அது அர்ஜூன்தான். அவர் எப்பவுமே தன் உடற்கட்டைப் பராமரிப்பதில் கில்லாடி. அதற்கேற்ற உணவு முறைகள், பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி என எல்லாவற்றையும் முiறாயகக் கடைபிடித்து வருகிறார்.

சங்கர் குரு: 80களில் அவர் நடித்த பல படங்களில் சண்டைக்காட்சிகள் பவர்ஃபுல்லாக இருக்கும். அப்போது சங்கர் குரு, தாய்மேல் ஆணை, என் தங்கை, பெரிய இடத்துப் பிள்ளை ஆகிய படங்கள் சூப்பர்ஹிட் ஆகின. 90களில் பிரதாப், சேவகன், அண்ணன் என்னடா தம்பி என்னடா படங்கள் வந்தன.

ஜென்டில் மேன்: அப்போது கோகுலம் என்ற படம் அவரது வித்தியாசமான நடிப்பை வெளிக்கொண்டு வந்தது. அதன்பிறகு 93ல் ஷங்கரின் இயக்கத்தில் ஜென்டில் மேன் வந்தது. அது அர்ஜூனின் திரையுலக வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. தொடர்ந்து ஜெய்ஹிந்த், கர்ணா படங்கள் சூப்பர்ஹிட் ஆகின. 1995ல் அர்ஜூன் முதன்முதலாக கமலுடன் இணைந்து குருதிப்புனல் படத்தில் நடித்தார். படம் வேற லெவல் ஆக ஹிட் அடித்தது.

மிரள வைக்கும் சண்டைக்காட்சி: 99ல் மீண்டும் ஷங்கருடைய இயக்கத்தில் முதல்வன் படத்தில் நடித்தார். பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. ஜென்டில்மேன், முதல்வன் என இரு படங்களிலுமே அவரது சண்டைக் காட்சிகள் அபாரமாக இருக்கும். முதல்வன் படத்தில் எல்லாம் சகதிக்குள் கிடந்து அவர் போடும் சண்டைக்காட்சி நம்மையே மிரள வைக்கும்.

வில்லன் அவதாரம்: மணிரத்னத்தின் கடல் படத்தில் வில்லனாக நடித்தார். மங்காத்தா படத்தில் அஜீத்துடன் இணைந்து கலக்கினார். லியோ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்தார். விடாமுயற்சியில் அஜீத்துக்கு வில்லனாக நடித்தார். ஆனால் அன்று முதல் இன்று வரை அதே இளமை, சுறுசுறுப்பு மட்டும் அவரிடத்தில் குறையவே இல்லை. உடலும் கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். இதற்கு என்னதான் காரணம்? வாங்க அவரே என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.

கேப்பக்கழி: நான் நல்ல ஸ்வீட் சாப்பிடுறேன். கேப்பக்கழி சாப்பிடுறேன். ஆயில் ஃபுட் சாப்பிட மாட்டேன். அவாய்டு பண்ணிருவேன். ஹோட்டல் ஃபுட் சுத்தமா சாப்பிடவே மாட்டேன். இப்போ இருக்குற ஜெனரேஷன் எல்லாம் ஷார்ட் கட்ல போயிடுறாங்க. அது எப்பவுமே நிலைக்காது. கஷ்டப்பட்டு உழைத்தால் தான் கடைசி வரைக்கும் பலன் இருக்கும்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top