Vidaamuyarchi: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், திரிஷா, அர்ஜூன், ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம்தான் விடாமுயற்சி. இந்த படம் கடந்த வருட துவக்கத்திலேயே துவங்கப்பட்டது. ஆனால், பல காரணங்களால் ஷூட்டிங் தடை பட்டு ஒருவழியாக போன வருடம் இறுதியில் முடிவடைந்தது. பொங்கலுக்கே வெளியிட திட்டமிட்டனர்.
ஆனால், லைக்கா நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியதால் படம் வெளியாகவில்லை. அதன்பின் பிப்ரவரி 6ம் தேதி படம் ரிலீஸ் என அறிவித்தார்கள். அஜித் புரமோஷனுக்கு வரமாட்டார் என்பதால் அப்படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனியே பல ஊடங்களிலும் பேட்டி கொடுத்தார்.
லைக்காவால் பிரச்சனை: விடாமுயற்சி வழக்கமான அஜித் சார் படமாக இருக்காது. மாஸ் அறிமுக காட்சி இல்லை. இந்த படத்தில் அஜித் பன்ச் வசனம் பேசமாட்டார். ஆனால், படம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்றெல்லாம் பேசியிருக்கிறார். மேலும், அஜித்தை பற்றிய பல விஷயங்களை அதில் பகிர்ந்துகொண்டார். அதோடு, அஜித்தை வைத்து மற்றொரு படத்தையும் இயக்கவுள்ளேன் எனவும் சொல்லியிருக்கிறார்.
பிப்ரவரி 6 ரிலீஸ்: படம் வெளியாக இன்னும் 3 நாட்களே இருப்பதால் முன்பதிவு வேகமாக நடந்து வருகிறது. முன்பதிவிலேயே பல லட்சம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. முன்பதிவில் மட்டும் விடாமுயற்சி படம் 25 கோடியை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
ஆயிரம் திரைகள்: இந்நிலையில், விடாமுயற்சி திரைப்படம் 1168 தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. இதில் சுமார் 1000 திரைகளில் இப்படம் திரையிடப்படும் என திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். விடாமுயற்சி திரைப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
அஜித்தின் திரைப்படம் வெளியாகி 2 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் விடாமுயற்சி படத்தை பார்க்க அவரின் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். எனவேதான் முன்பதிவிலும் இப்படம் சாதனை படைத்திருக்கிறது. இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வசூலை அள்ளும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
