latest news
விஜய் மாதிரி நடிக்காத நடிகர்… குடிச்சிட்டு நடிக்கச் சொன்ன இயக்குனர்!
Published on
விஜய் நடித்த ஒரு சூப்பர்ஹிட் படம் இந்தியில் உருவானது. அப்போது அந்தப் படத்தில் விஜய் நடித்தது போல அந்த நடிகரால் நடிக்க முடியவில்லை. அதற்கு இயக்குனர் மது குடிச்சிட்டு நடிங்க. அப்பத்தான் வரும்னு சொன்னாராம். இது எப்போ நடந்ததுன்னு கேட்குறீங்களா? வாங்க பார்க்கலாம்.
திருப்தி இல்லை: விஜயை வைத்து எஸ்.ஜே.சூர்யா இயக்கிய குஷி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அந்தப் படத்தை இந்தியில் எஸ்.ஜே.சூர்யா இயக்கினார். அங்கு பர்வீன் காந்த் ஹீரோவாக நடித்தார். குடித்து விட்டு வசனம் பேசுவது போல அந்தப் படத்தில் ஒரு காட்சி. ஆறேழு டேக் எடுத்தும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு திருப்தி இல்லை.
கொஞ்சம் விஸ்கி: யோசித்து யோசித்துப் பார்த்த அந்த ஹீரோ அடுத்து செய்த காரியம்தான் மிக முக்கியமானது. அருகில் இருந்த உதவியாளர்கிட்ட கொஞ்சம் விஸ்கி வாங்கிட்டு வரச் சொன்னாரு. அவரும் வாங்கி வந்தாரு. குடித்து விட்டுப் பேசினார். அந்தக் காட்சி அற்புதமாக அமைந்தது.
குடிச்சிட்டு பேசுங்க: டப்பிங் நடந்தது. அப்போது பர்வீனுக்கு ஆறேழு டேக் வாங்கியது. அப்போது எஸ்.ஜே.சூர்யா ஒரு காரியம் செய்தார். அருகில் இருந்த உதவியாளரை அழைத்து மது வாங்கி வரச் சொன்னார். ‘நீங்க காட்சியில நடிக்கும்போது குடிச்சிட்டுத்தானே நடிச்சீங்க. வசனம் பேசும்போதும் அப்படியே பேசுங்க. அதுதான் சரியா வரும்’ என்றார்.
அதே போல குடித்து விட்டு நடித்தார். பிரமாதமாக வந்தது. இந்த வித்தியாசமான அனுபவத்தைப் பத்திரிகையாளர் ஒருவரிடம் பகிர்ந்து கொண்டுள்ளார் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
குஷி: 2000ம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா விஜயை வைத்து இயக்கிய சூப்பர்ஹிட் படம் குஷி. தேவாவின் இசையில் தேன் சொட்டும் பாடல்கள் இருந்தன. படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
விஜயகுமார் அவரது தந்தை வேடத்தில் சூப்பராக நடித்து இருந்தார். மேக்கரீனா, மேகம் கருக்குது, மொட்டு ஒன்று, கட்டிப்புடி, ஓ வெண்ணிலா, ஒரு பொண்ணு ஆகிய பாடல்கள் உள்ளன. படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் விஜயின் திரைவாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.
TVK Vijay: தவெக தலைவரான விஜய் நேற்று கரூருக்கு சென்றிருந்தபோது அவரை பார்க்க பல ஆயிரம் பேர் கூடிவிட்டனர். அப்போது ஏற்பட்ட...
TVK Stampede: விஜயின் கரூர் மக்கள் சந்திப்பின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு பிரச்னையில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கும் நிலையில், பலர்...
Vijay TVK: நேற்று கரூரில் நடந்த அந்த துயர சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. கரூரில் தனது பரப்புரையை நடத்துவதற்காக...
Karur: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நேற்று கரூருக்கு சென்றிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த...
Tvk Stampede: தவெக தலைவர் விஜயின் கட்சி கூட்டத்தில் நடந்த தள்ளுமுள்ளுவில் சாவு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் எதிர்கட்சி தலைவர்...