AR Rahman: ரோஜா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைக்க துவங்கியவர் ஏ.ஆர்.ரஹ்மான். மிகவும் சிறிய வயதிலேயே இசையமைப்பாளர் ஆனவர் இவர். இவரின் அப்பா சேகர் ஆர்.கே.சேகர் மலையாளத்தில் பிரபலமான இசையமைப்பாளராக இருந்தார். அவரிடம்தான் ரஹ்மான் இசையையும் கற்றுக்கொண்டார்.
பல படங்களுக்கு இசையமைத்த சேகர் திடீரென இறந்து போக குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ரஹ்மானுக்கு வந்தது. பல இசையமைப்பாளர்களிடமும் சென்று வேலை செய்தார். இளையராஜாவிடமும் பல படங்களுக்கு கீ போர்டு வாசிக்கும் வேலையை செய்திருக்கிறார். புன்னகை மன்னன் படத்தில் வரும் தீம் மியூசிக்கை வாசித்தவர் ரஹ்மான்தான்.
ரோஜா படத்தில் மணிரத்னம் இவரை அறிமுகம் செய்து வைத்தார். இந்த படத்தில் இடம் பெற்ற சின்ன சின்ன ஆசை பாடல் மக்களிடம் பிரபலமாகியது. அதேபோல், காதல் ரோஜாவே, புது வெள்ளை மழை போன்ற பாடல்களும் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்தது. ரஹ்மானின் துள்ளாலான இசை எல்லோருக்கும் பிடித்துப்போனது.

அதன்பின் ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், இந்தியன் என ரஹ்மான எனும் இசைப்புயல் சூறாவளி போல சுழன்றது. அவரின் இசை இளசுகளை ஆட்டம் போட வைத்தது. ஒரு பக்கம் பாலிவுட்டுக்கும் போய் கலக்கினார் ரஹ்மான். அவரின் இசைக்கு நடனம் அமைக்க முடியாமல் பாலிவுட் நடன இயக்குனர்கள் தடுமாறினார்கள்.
ஸ்லம்டாக் மில்லினியர் படத்துக்காக 2 ஆஸ்கர் விருதுகளை வாங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார் ரஹ்மான். இளையராஜாவை போல எந்த கெட்டப்பழக்கமும் இவருக்கு இல்லை. தான் உண்டு, தன் இசை உண்டு என வாழ்ந்து வருகிறார். பொதுவாக எல்லோரின் வீட்டிலும் பள்ளிக்கு போகும் வயதில் அதை மட்டுமே செய்ய சொல்வார்கள். ஆனால், ரஹ்மான் விஷயத்தில் நடந்தது வேறு.
இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய ரஹ்மான் ‘நான் இசை துறைக்கு வந்ததற்கு காரணம் என் அம்மாதான். படித்து நேரத்தை வீணடிக்காமல் அப்பாவின் தொழிலை அவன் கற்றுக்கொண்டால் போதும்’ என அவர் சொன்னார். என்னை அவர் சரியாக கணித்திருந்தார் என சொல்லி இருக்கிறார்.

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com
