latest news
எம்ஜிஆரையும் கூட விட்டு வைக்கலயே..! அங்கே போனா பெரிய நடிகர்களின் பாச்சா பலிக்காதாமே..!
Published on
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளில் 136 படங்களைத் தயாரித்தது மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம். இது 1935ல் சேலத்தில் தொடங்கப்பட்டது. டிஆர்.சுந்தரம் இந்த நிறுவனத்துக்கு என்று பல கட்டுப்பாடுகளை வைத்து இருந்தார். மாடர்ன் தியேட்டர்ஸைப் பொருத்தவரை படப்பிடிப்பு நடக்கும்போது அதன் உள்புறமாகத் தாழிடப்பட்டு இருக்கும்.
விட்டுப் போக முடியாது: யாரும் அவ்வளவு எளிதில் அந்தப் படப்பிடிப்பு தளத்தை விட்டுப் போகவே முடியாது. மாடர்ன் தியேட்டர்ஸைப் பொருத்தவரை நடிப்பது எவ்வளவு பெரிய நடிகர்களாக இருந்தாலும் அவர்களைத் தேடி உணவு போகாது. உணவு எங்கிருக்கோ அங்குதான் சென்று சாப்பிட வேண்டும்.
கலைஞர் மாற்றப்படுவர்: நேரக்கட்டுப்பாடு என்பது மிக முக்கியமானது. ஒப்பனைக்கோ, படப்பிடிப்புக்கோ நேரத்திற்கு ஒரு கலைஞர் வரவில்லை என்றால் உடனடியாக அந்தக் கலைஞர் மாற்றப்பட்டு விடுவார். ஒரு படத்திற்கான கதை, வசனத்தை முழுமையாக எழுதி முடித்ததற்குப் பின் அந்தப் படத்தின் நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நட்சத்திரங்களுக்காக, கதையிலோ, வசனத்திலோ எக்காலத்திலும் மாற்றங்கள் செய்யப்படாது. இப்படி பல கட்டுப்பாடுகளோடு மாடர்ன் தியேட்டர்ஸை நிர்வகித்தவர்தான் அந்தப் நிறுவனத்தின் அதிபர் டிஆர்.சுந்தரம். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர், ஜெய்சங்கர்: வல்லவன் ஒருவன், சிஐடி சங்கர், மந்திரிகுமாரி ஆகிய படங்கள் இந்த நிறுவனத்தின் படைப்புகள்தான். வல்லவன் ஒருவன், சிஐடி சங்கர் ஆகிய படத்தில் ஜெய்சங்கரும், மந்திரிகுமாரியில் எம்ஜிஆரும் நடித்துள்ளனர்.
அந்தக்காலத்தில் எம்ஜிஆர், ஜெய்சங்கர் இவர்கள் எல்லாம் வளர்ந்து வந்த நடிகர்கள்தான். ஆனாலும் அவர்கள் சினிமாவுக்காகத் தங்கள் முழு உழைப்பையும் தந்தார்கள். சிறிய வேடம் என்றாலும் அர்ப்பணிப்பு உணர்வோடு செய்தார்கள்.
பிற்கால வளர்ச்சி: காலத்திற்கும் அவர்கள் சரியான நேரத்துக்கு வர இதுபோன்ற கடும் கட்டுப்பாடுகள்தான் காரணம். அதுவே அவர்களது பிற்கால வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
TVK Vijay: தவெக தலைவரான விஜய் நேற்று கரூருக்கு சென்றிருந்தபோது அவரை பார்க்க பல ஆயிரம் பேர் கூடிவிட்டனர். அப்போது ஏற்பட்ட...
TVK Stampede: விஜயின் கரூர் மக்கள் சந்திப்பின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு பிரச்னையில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கும் நிலையில், பலர்...
Vijay TVK: நேற்று கரூரில் நடந்த அந்த துயர சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. கரூரில் தனது பரப்புரையை நடத்துவதற்காக...
Karur: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நேற்று கரூருக்கு சென்றிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த...
Tvk Stampede: தவெக தலைவர் விஜயின் கட்சி கூட்டத்தில் நடந்த தள்ளுமுள்ளுவில் சாவு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் எதிர்கட்சி தலைவர்...