பாபாவில் துவண்ட ரஜினி: ரஜினிக்கு பாபா திரைப்படம் மிகப்பெரிய அளவில் தோல்வியை பெற்றுக் கொடுத்தது. அருடைய கெரியரே அவ்வளவுதான் என அனைவரும் பேசிக் கொண்டிருந்த நேரம் அது. அந்த நேரத்தில் சிவாஜி புரொடக்ஷன் மூலமாக அவருக்கு ஒரு பெரிய வாய்ப்பு வந்தது. அதுதான் சந்திரமுகி திரைப்படம். வாசு இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான அந்த படத்தில் ஜோதிகா நயன்தாரா பிரபு என எண்ணற்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர்.
பேச்சுவார்த்தை:கன்னட படத்தின் ரீமேக்தான் இந்த சந்திரமுகி திரைப்படம். கன்னடத்திலும் இந்த படம் பெரிய அளவில் வெற்றியடைந்தது. அதைப் போல தமிழிலும் சந்திரமுகி திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு ரசிகர்கள் கொடுத்தார்கள். இந்த நிலையில் சந்திரமுகி படத்தை பற்றி இசையமைப்பாளர் தேவா அவருடைய சில அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார். ஒரு நாள் படம் சம்பந்தமாக சிவாஜி வீட்டில் தான் பேச்சுவார்த்தை நடந்ததாம்.
ரஜினி சொன்ன விஷயம்: அப்போது தேவாவையும் வாசு வரச் சொன்னாராம். அதனால் தேவாவும் சிவாஜி வீட்டிற்கு சென்று இருக்கிறார். தேவாவை பார்த்ததும் ரஜினி தேவா சார் சிவாஜி புரொடக்ஷனில் நாம் அடுத்த படம் பண்றோம் என கூறி இருக்கிறார். இது அப்படியே பத்திரிகைகளில் சந்திரமுகி படத்தில் தேவா தான் மியூசிக் என வெளியானதாம் .ஆனால் படம் ஆரம்பிக்கப்படும் பொழுது இந்த படத்திற்கு வித்தியாசாகர்தான் இசையமைப்பாளர்.
கடைசி நேரத்தில் நடந்த மாற்றம்: ஏனெனில் இந்த படத்தின் ஒரிஜினல் கன்னட படத்தில் வித்தியாசாகர்தான் இசை அமைத்திருந்தாராம். அதனால் அந்த படத்தின் முழு கதையும் வித்தியாசகருக்கு தெரியும் என்பதால் தமிழில் அவர் பண்ணினால் நன்றாக இருக்கும் என்ற காரணத்தினால் வித்தியாசாகர் தமிழில் இசையமைத்தார். ஆனால் பாடல்கள் அனைத்தும் மிக அற்புதமாக இருந்தது என தேவா ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
chandramukhi
பாட்ஷா படத்தில் தேவாவின் இசை ரஜினியை எங்கேயோ கொண்டு சென்று விட்டது. அந்தப் படத்தின் பிஜிஎம்மைத்தான் இன்றளவும் ரஜினியின் படங்களில் டைட்டிலாக போடுகிறார்கள். அதனால் சந்திரமுகி படத்திற்கும் அவர்தான் இசை என்று செய்தி வெளியானதும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. ஆனால் கடைசி நேரத்தில் எல்லாமே மாறிவிட்டது.
