Connect with us

latest news

கை கொடுக்க வந்த ஊழியர்.. பதறிப் போய் நித்யா மேனன் செய்த செயல்

சினிமாவில் ஆரம்ப காலகட்டங்களில் ஹீரோவுக்கு முக்கியத்துவம் கொடுத்தே பல கதைகள் வெளியானது. ஆனால் சமீப காலமாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் பல படங்கள் வெளியாகி வருகின்றன. அதுவும் இந்த ஹீரோயின்கள் என்றால் கண்டிப்பாக அவர்களை மையப்படுத்தி ஒரு படத்தை எடுத்து விடலாம் என்ற வகையில் ஒரு சில நடிகைகள் இருக்கிறார்கள்.

அந்த வகையில் அதில் முக்கியமாக கருதப்படுபவர் நடிகை நித்யா மேனன். அவர் நடித்த அத்தனை படங்களுமே ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. அதுவும் கேரக்டர் ரோல் என்றால் அவருக்கு கைவந்த கலை. என்ன மாதிரியான கேரக்டர் கொடுத்தாலும் அதை உள்வாங்கிக் கொண்டு அதை அப்படியே வெளிப்படுத்தக்கூடிய நடிகை நித்யா மேனன்.

நடிகையர் திலகம் என சாவித்ரியையும் ராதிகாவையும் சொல்லலாம். இவர்கள் வரிசையில் நித்யா மேனனையும் இப்போது இணைத்துக் கொள்ளலாம். அந்த அளவுக்கு நடிப்பில் கை தேர்ந்தவர் நித்தியா மேனன். ஓகே காதல் கண்மணி படத்தில் நடித்து இளம் ரசிகர்களை கொள்ளை கொண்டார்.

அதனைத் தொடர்ந்து தமிழில் சொற்ப படங்களில் நடித்தாலும் அத்தனை படங்களுமே தி பெஸ்ட் படங்களாகவே அவருக்கு அமைந்திருக்கின்றன. இந்த நிலையில் ஜெயம் ரவியுடன் காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் நடித்துள்ளார் நித்யா மேனன்.

அந்த படம் பொங்கல் ரிலீஸ் ஆக வெளியாக இருக்கின்றது. படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது ஜெயம் ரவி நித்யா மேனன் மிஸ்கின் உட்பட திரை நட்சத்திரங்கள் அந்த விழாவில் கலந்து கொண்டனர். அப்போது நித்யா மேனன் ஒரு மேடையில் பேசும்போது அங்கிருந்த ஊழியர் ஒருவர் வேகமாக கை கொடுக்க வந்தார் .

உடனே நித்யா மேனன் கை கொடுக்காமல் கையை கும்பிட்டபடி எனக்கு உடம்பு சரியில்லை. இல்லையென்றால் கோவிட் மாதிரி என்னுடைய காய்ச்சல் உங்களுக்கும் பரவிவிடும் என சொல்லியபடி கை கும்பிட்டு விட்டுச் சென்றார். ஆனால் ஜெயம் ரவியை பார்த்ததும் ஓடிப்போய் அவரை கட்டிப்பிடித்து தன்னுடைய அன்பை பரிமாறிக் கொண்டார்.

மேலும் மிஸ்கினுக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்து அவருடைய அன்பை பரிமாறிக் கொண்டார் நித்யா மேனன். இதை பார்த்த நெட்டிசன்கள் ஊழியர்களுக்கு ஒரு நியாயம் நடிகர்களுக்கு ஒரு நியாயமா என அவரை கேள்வி கேட்டு வருகின்றனர்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top