Connect with us

Cinema News

ஒரே மாதத்தில் பழைய ஆளாக வந்த அரவிந்தசாமி… மணிரத்னம் போட்ட ஸ்கெட்ச் நல்லா வேலை செஞ்சிருக்கே!

மணிரத்னம் 1991ல் தளபதி படத்தில் அரவிந்தசாமியை அறிமுகப்படுத்தினார். ரஜினி, மம்முட்டி என இரு பெரிய ஜாம்பவான்கள் அந்தப் படத்தில் நடித்து இருந்தனர். அதனால் அரவிந்தசாமி பெரிதாகத் தெரியவில்லை. ஆனாலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

அதன்பிறகு 92ல் அவர் இயக்கிய படம் ரோஜா. இந்தப் படத்தில் கதாநாயகன் அரவிந்தசாமி தான். ஸ்மார்ட்டான நடிப்பைக் கொடுத்து தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தார். கல்லூரிப் பெண்கள் முதல் கிராமத்துக் கன்னியர் வரை கட்டுனா இப்படிப்பட்ட அழகான மாப்பிள்ளையைத் தான் கட்ட வேணும்னு பேசினார்கள்.அந்த அளவுக்கு அவரது மார்க்கெட் எகிறியது.

அழகாகவும் ஹேண்ட்சம்மாகவும் இருந்தார். எந்தப் படத்தில் நடித்தாலும் அலட்டாத, ஆர்ப்பாட்டம் இல்லாத, அலப்பறை இல்லாத அமைதியான நடிப்பைக் கொடுத்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தார்.

தொடர்ந்து அவருடைய மறுபடியும், தாலாட்டு, பம்பாய், மின்சாரக் கனவு, என் சுவாசக் காற்றே ஆகிய படங்கள் அவருடைய தேர்ந்த நடிப்பைத் தந்தன. தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து மாஸ் காட்டினார்.

சினிமா நடிகர் மட்டுமல்லாமல் இவர் ஒரு பிசினஸ் மேனாகவும் இருந்தார். 2005ல் இவர் நடித்த சாசனம் படம் பிளாப் ஆனது. அதன்பிறகு அவருக்கு ஒரு விபத்து நேர்ந்தது. வாழ்க்கையே ஸ்தம்பித்து விட்டது. ஆபரேஷன் செய்யப்பட்டது.

bambai

bambai

ஆளே மாறிப் போனார். தலைமுடி எல்லாம் கொட்டிப்போனது. உடலும் எடை போட்டு குண்டாகி ஆளே மாறிப் போனார். அதன்பிறகு நடிப்பாரா என்பதே சந்தேகமாக இருந்தது.

இந்த நிலையில் 2012ல் மணிரத்னத்திடம் இருந்து அழைப்பு. கடல் படத்தில் எப்படியாவது அரவிந்தசாமியை நடிக்க வைத்து விட வேண்டும் என்று தீர்மானித்து விட்டார். அரவிந்தசாமி அவரிடம் ஒன்றே ஒன்றுதான் கேட்டார்.

‘2 மாதம் டைம் கொடுங்க. மீண்டும் மீண்டு வந்தால் நடிக்கிறேன்’ என்றாராம். அதன்படி கடுமையான உடற்பயிற்சி, உணவு ஆகியவற்றைக் கடைபிடித்து பழைய ஆளாக மாறினார். அதுவும் ஒரே மாதத்தில். அப்புறம் கடல் படத்திலும் நடித்து விட்டார். 8 வருடத்திற்குப் பின் ரீ என்ட்ரி கொடுத்தார்.

kadal movie

kadal movie

நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் அறிமுகமான படமும் கடல்தான். இதே படத்தில் தான் ராதாவின் இளைய மகள் துளசி நாயர் அறிமுகம். இந்தப்படத்தில் அர்ஜூன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடல்கள் சூப்பர்ஹிட்டாக இருந்தன. ஆனால் படம்தான் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை.

தொடர்ந்து அவர் நடித்த தனி ஒருவன் சூப்பர்ஹிட் ஆனது. போகன் படமும் அவரது டிரேட் மார்க் நடிப்பைக் கொடுத்தது. அப்புறம் வந்த தலைவி சுமார் ரகம். கடைசியாக வந்த மெய்யழகனில் விட்ட இடத்தைப் பிடித்துவிட்டார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top