Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

பாண்டியன் கடையில் எல்லாரும் வந்து கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர். ஆனால் அவர் பதில் சொல்லாமல் அமைதியாகவே இருக்க அங்கு வரும் பழனி எல்லாரையும் திட்டி அனுப்பி விடுகிறார்.

வீட்டில் அரசி அமர்ந்து இருக்க ராஜி அம்மா, குமார் அம்மா என எல்லாரும் இதை எப்படி நீ செஞ்ச. கல்யாணம் ஏற்பாடு செஞ்சப்பவே உனக்கு தெரியும் தானே. அப்போவே வீட்டில் சொல்லி இந்த கல்யாணத்தை நடத்தாமல் இருந்து இருக்கலாம் தானே எனக் கேட்கின்றனர்.

ஆனால் அரசி எதுவும் பேசாமல் அமைதியாகவே இருக்கிறார். அப்போது வரும் சுகன்யா எப்படி இந்த முடிவை எடுத்த எனக் கேட்கிறார். நேத்து வரை குமாரை எனக்கு பிடிக்கவே பிடிக்காது என்று தானே என்கிட்ட சொல்லிட்டு இருந்த என்கிறார். அந்த நேரத்தில் குமார் வருகிறார்.

ஆமாம் சொல்லிட்டு இருந்தேன். ஆனால் இவர் பேசுனதுல என் மனசு மாறிட்டு என அரசி கூற நல்லா இருந்த பொண்ணு மனச கெடுத்து இருக்க எனத் திட்டுகின்றனர். அரசி எல்லாரும் என்னையே கேள்வி கேட்கிறாங்க. நீங்க பதில் பேசுங்க என குமாரை மாட்டி வைக்கிறார்.

ஒருகட்டத்தில் எல்லாரும் சென்று விட வீட்டினரிடம் சொல்லிவிட்டு சுகன்யா அரசியை குமார் ரூமிற்கு அழைத்து செல்கிறார். என்னிடம் கூட இந்த ஐடியாவில் நீங்க இருக்கீங்கனு சொல்லவே இல்லையே என அவர் சொல்ல ஒன்னும் சொல்லாமல் அவரையே பார்த்து கொண்டு இருக்கிறார் அரசி.

வீட்டிற்கு வரும் பாண்டியன் குடித்துவிட்டு வர மகன்கள் அவரை பிடித்து அழைத்து செல்ல அவர் முரண்டு பிடிக்கிறார். கோமதி செய்வது அறியாமல் இருக்க பின்னர் சாமியிடம் சென்று கையெடுத்து கும்பிட்டு அழுகிறார்.

ரூமிற்குள் சென்றதும் அரசியை பார்த்து கோபப்படுகிறார் குமார். உன்னை நான் காதலிக்கவே இல்லை. கல்யாணம் நமக்கு நடக்கவே இல்லை. ஒழுங்கா போய் எல்லாரிடமும் இந்த உண்மையை சொல்லு என குமார் கேட்க நான் ஏன் சொல்லணும்.

உங்களுக்கு வேண்டும் என்றால் நீங்க போய் சொல்லுங்க. ரெண்டு வீட்டுக்கு முன்னாடி பேச எந்த துப்பும் இல்லை. என்னிடம் பேச வந்துட்டீங்களா எனக் கேள்வி கேட்கிறார். குமார் அதிர்ச்சியாகி நிற்க அரசி கட்டிலை சரி செய்து கொண்டு இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் குமார் கடுப்பாகி அரசி கையை பிடித்து வெளியில் தள்ளப்பார்க்க அவர் கத்தியை எடுத்து குமார் கழுத்தில் வைக்கிறார். இதில் குமார் ஷாக்காகி நிற்க இந்த கை வைக்கிற வேலை வச்சிக்கிட்ட அறுத்து போட்ருவேன் என அரசி மிரட்டுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *