Connect with us

Cinema News

விஜய் கட்சி பற்றிய கேள்வி!… விண்வெளி நாயகன் என்ன சொல்லிருக்கார் பாருங்க!….

நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். தனது ஜனநாயகன் படம் தான் கடைசி. அதன்பிறகு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார். இதனால் ஹெச்.வினோத் இயக்கும் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

படம் வரும் 2026 பொங்கலையொட்டி ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதனுடன் வரும் என எதிர்பார்க்கப்பட்ட சிவகார்த்திகேயன் படம் பராசக்தி அமலாக்கத் துறை ரெய்டு காரணமாக தள்ளிப்போகும் சூழல் உள்ளது.

அதே நேரம் விஜய் தனது அரசியல் நடவடிக்கைகளிலும் தீவிரம் காட்டி வருகிறார். பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியிலும் தனது கட்சியை வலுப்படுத்தும் வகையில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். நேற்று சென்னையில் நடந்த கல்வி திருவிழாவில் 10 மற்றும் 12ம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.

அப்போது விஜய் பேசும்போது ஓட்டுக்காக காசு கொடுக்கும் அரசியல் கட்சிகளைப் புறக்கணியுங்கள். அடுத்த ஆண்டு தேர்தலின் போது வண்டி வண்டியாகப் பணம் கொண்டு வருவார்கள். அவங்களுக்கு நீங்க என்ன செய்யப் போறீங்க? பெரியாருக்கே சாதிச்சாயம் பூசுறாங்க. நீட் மட்டுமே வாழ்க்கை அல்ல. அதையும் தாண்டி இந்த உலகம் பெரிசு. பிள்ளைகளை அவர்கள் விரும்பிய துறையில் படிக்க வைங்கன்னு பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் பல அட்வைஸ்களை பண்ணினார் விஜய்.

இது பல்வேறு அரசியல்கட்சியினர் மத்தியில் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. பல்வேறு விமர்சனங்களையும் விஜய் சந்தித்தார். அந்த வகையில் கமல் தனது தக்லைஃப் பட புரொமோஷனுக்காக ஊர் ஊராகப் போய் வருகிறார். இவரும் கன்னடம் தமிழில் இருந்து வந்ததுதான் என்று பேசி சர்ச்சையில் சிக்கினார்.

இதனால் அவரது படம் கர்நாடகாவில் திரையிடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்று சென்னை விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவராக உள்ள கமலிடம் விஜய் புதுசாகக் கட்சி தொடங்கி நடத்தி வருகிறார். அவரைப் பற்றி என்ன சொல்றீங்கன்னு கேட்டாங்க. அதற்கு கமல், நானே புதுக்கட்சித் தான். அதனால் புதிய கட்சிகள் குறித்து விமர்சிக்கக்கூடாது என்று சொல்லி நழுவி விட்டார். இப்போது கமலுக்கு எம்பி பதவியும் கொடுக்கப்பட உள்ளது.

கமல் தக் லைஃப் படம் குறித்தும், எம்.பி. பதவி குறித்தும் கேட்கையில் கமல், தக் லைஃப் படம் நல்லா இருக்கும்னு நம்பித்தான் உங்க முன்னாடி விடுறோம். எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. இப்போ கூட நான் மலேசியா, துபாய்னு புரொமோஷனுக்குத் தான் போய்க்கிட்டு இருக்கேன் என்றார். எம்பி. பற்றிக் கேட்ட போது, நாடாளுமன்றத்தில் மய்யத்தின் குரல் அங்கு ஒலிக்க வேண்டும். அது பாரபட்சமில்லாத தமிழர்களுக்கான குரலாக ஒலிக்க வேண்டும் என்றார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top