Connect with us

latest news

siragadikka Aasai: மீண்டும் வீட்டுக்கு வரும் கறிக்கடைக்காரர்…

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

சீதா அருணை சந்தித்து எங்க மாமா சம்மதம் இல்லாம இந்த கல்யாணம் நடக்காது. அக்காவும், மாமாவும் சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்காங்க. நீங்க உங்க பிடிவாதத்தால கெடுத்துடாதீங்க. என்னை மறந்துடுங்க எனச் சொல்லி செல்கிறார் சீதா.

வெளியில் அவர் வர அருண் அம்மா சீதாவை அழைக்க ஆனால் அவர் பார்க்காமல் சென்று விடுகிறார். என்னடா திட்டுனீயா எனக் கேட்க அவன் என்னை வேண்டாம் எனச் சொல்லி செல்வதாக அருண் சொல்கிறார்.

முத்து சீதாவிற்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து அவரை விசாரிக்க வர அவர் குடிப்பாருனு சிலரும், சிகரெட் அடிப்பானு சிலரும் சொல்கின்றனர். ஒரு சிலர் லவ் பெயிலியர் என்றும் சொல்ல முத்து இது சரிப்பட்டு வராது. மீனா உங்களை மாதிரியே ஒரு ஆளை பாத்தீங்களா எனக் கேட்டுடுவா எனச் செல்கிறார்.

மறுநாள் காலையில் முத்து வேலைக்கு கிளம்ப அப்போ கறிக்கடைக்காரர் மணி வந்து நிற்கிறார். முத்து எல்லாரையும் வாங்க வாங்கனு கத்த குடும்பத்தினர் வந்து அதிர்ச்சியுடன் பார்க்கின்றனர். ரோகிணி அதிர்ச்சியாக நிற்கிறார்.

விஜயா கோபத்தில் கத்த பெரிய நாடக கம்பெனியா நடத்துறீங்க? என்னமோ மலேசியாவே உங்களுக்கு சொந்தம் என பேசியது போல நடந்து கொண்டதாக சொல்கிறார். அண்ணாமலை நீங்க மூத்தவரு அந்த பிள்ளை சொன்னாலும் நீங்க இப்படி செய்யலாமா எனக் கேட்கிறார்.

சரி இப்போ எதுக்கு வந்தீங்க எனக் கேட்க இந்த பிரச்னையால என்னை தவறா நினைக்கிறாங்க. என் தங்கச்சி, மாப்பிள்ளை, பரசுவிடம் எனக்கு இருந்த மரியாதையே போச்சு. நீங்க வந்து பேசணும் எனக் கேட்க அண்ணாமலை இனிமே இப்படி பண்ணாதீங்க என்கிறார்.

நான் பரசுவிடம் பேசுக்கொள்கிறேன் எனக் கூற அவரும் கிளம்புகிறார். பின்னர் மணியை நிறுத்தி என் மேல உங்களுக்கு கோபம் இருக்கும். என் கார் வயரை நீங்களா அறுத்தீங்க எனக் கேட்க நான் அப்படி பண்ணலை. நீங்களும், மீனாவும், முத்துவும் இந்த வீட்டுக்கு நல்லது செய்றீங்க. உங்களுக்கு அப்படி பண்ண மாட்டேன் எனச் சொல்லி செல்கிறார்.

வீட்டுக்கு வரும் சீதா தனக்கு இந்த மாப்பிள்ளை வேண்டாம் எனச் சொல்லி செல்கிறார். சத்யா ஆசைப்பட்டாலே எனக் கேட்க என்ன செய்ய மாமாக்கும் அவருக்கு செட்டாகலை. இப்போ அவளே மனசை மாத்திக்கிட்டா. விடு என்கிறார்.

சத்யா, நான் உனக்கு எந்த உதவியும் செய்யலை. மீனா அக்காவும், சீதாவும் நிறைய உதவி செஞ்சி இருக்காங்க. அவ இத்தனை நாளா ஒரு சின்ன ஆசையை கூட கேட்கலை என்கிறார். மாமாக்கு பிடிக்கணும் என்கிறார் சீதாவின் அம்மா.

ஷெட்டில் முத்து தன் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறார். சீதாக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்கணும்.

இப்போலாம் பொண்ணு கிடைக்கிறதை விட மாப்பிள்ளை கிடைக்கிறதுதான் சிக்கலா இருக்கு என்கிறார். ரோகிணி மகேஷ் என சிரித்து சிரித்து பேச மனோஜ் ஒட்டுக்கேட்டு கொண்டு இருக்கிறார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top