
latest news
பரமு கல்யாணத்தில் இறங்கிய விஜயா குடும்பம்… இப்போவாது சிக்குவாரா ரோகிணி?
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்க இருக்கும் எபிசோடின் தொகுப்புகள்.
மனோஜ் வெத்தலையில் மை வைத்து கதிரை தேடி ரவி மற்றும் முத்து இருவரும் கலாய்த்து கொண்டு இருக்கின்றனர். வந்த சாமியாரும் முடியாமல் கிளம்பி விடுகிறார். அவரை முத்து உனக்கு இதெல்லாம் தேவையா எனக் கலாய்த்துவிடுகிறார்.
பின்னர் அடுத்த நாள் காலை மனோஜுக்கு பிறந்தநாள் வர ரோகிணி அவருக்கு முதல் வாழ்த்தை சொல்கிறார். நைட்டே சொல்லுவேனு நினைச்சேன் எனக் கூற எழுந்தேன் நீ தூங்குன என்கிறார். வெளியில் வர ரவி மற்றும் முத்து, ஸ்ருதி மற்றும் மீனா வாழ்த்து சொல்கின்றனர்.

siragadikka aasai
முத்து, மனோஜை கலாய்க்கிறார். ஒரு கட்டத்தில் ரவி ட்ரீட் கேட்க போக முத்து பேச வரும் போது அவரை அமைதியாக்கி கொண்டு செல்கிறார் மீனா. ஏன் என முத்து கேட்க உங்களுக்கு கலாய்க்காம இருக்க முடியாது. இன்னைக்கு வேண்டாம் என்கிறார்.
பின்னர் மனோஜுக்கு கார் வாங்க ஆள் வந்திருக்க அவருடன் பேசிக்கொண்டு இருக்கின்றனர். மனோஜுக்கு கேக் வெட்டி எல்லாரும் வாழ்த்துக்களை சொல்கின்றனர். அதையடுத்து, காலையில் எல்லாரும் பரமுவின் வீட்டு விசேசத்துக்கு கிளம்பி செல்கின்றனர்.
உள்ளே சென்றதும் விஜயா உட்கார்ந்து விடுகிறார். ரோகிணி மேக்கப் செய்ய போக அவருக்கு காபி எடுத்து செல்கிறார் கறிக்கடைக்காரர். பரமுக்கு கல்யாண செலவுக்காக அண்ணாமலை காசு கொடுக்க போக அதை பார்த்த விஜயா திட்டிக்கொண்டு இருக்கிறார்.
அவர் வாயை அடக்குகிறார் ரவி. பின்னர் கறிக்கடைக்காரரிடம் மீனாவின் தோழி பார்த்து பேசுகிறார். நாங்க தான் இங்க டெக்கரேஷன் எனக் கூறி மீனாவை காட்ட அதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது. இந்த முறை ரோகிணி மாட்டுவாரா இல்லை புதுக்கதையானு பார்ப்போம்.