Connect with us

latest news

தயாரிப்பாளரிடம் போனில் கதறி அழுத கார்த்திக்… ஏன்னு கேட்டா அசந்துருவீங்க..!

நவரச நாயகன் கார்த்திக் படங்கள் என்றாலே பார்ப்பதற்கு ஒரு ஆர்வம் வந்து விடும். துள்ளி துள்ளி துரு துருன்னு அவர் பேசி நடிக்கும் நடிப்பு யாருக்கும் வராது. கிழக்குவாசல் படம் வெளியான காலகட்டத்தில் அவர் பீக்கில் இருந்தார். அவரது படங்கள் எல்லாமே சில்வர் ஜூப்ளிதான். அப்போது பொன்னுமணி படமும் வந்து ஹிட்டானது.

கார்த்திக் தயாரிப்பாளர் டி.சிவாவிடம் ஒருமுறை போன் செய்து கதறி அழுதுள்ளார். என்னாச்சுன்னு தயாரிப்பாளர் கேட்டுள்ளார். ‘என்னைப் பத்தி இவ்ளோ நல்லா சொல்லி யாருமே சொல்லிக் கேட்டது இல்ல. எப்படி இவ்ளோ ஞாபகம் வச்சி சொல்றீங்க. நீங்க சொல்ல சொல்லதான் நான் ரீபிளே பண்றேன்’னு அழறாரு. ‘அதெல்லாம் ஒண்ணுமில்ல. உங்களை யாரு என்ன தப்பு சொல்றா? என்னமோ கால சூழ்நிலையாலதான் நீங்க தள்ளிப்போயிட்டீங்க’ன்னு ஆறுதல் சொல்லி இருக்கிறார் டி.சிவா.

அவர் கார்த்திக்கைப் பற்றிய ஒரு பாசிடிவான தகவலையும் தெரிவித்துள்ளார். மது தான் டைரக்டர். கிழக்கு வாசல் கதை எழுதுனது இவருதான். இவர் முதல்ல ‘பள்ளிக்கூடம் தொறந்தாச்சு’ன்னு ஒரு கதையை சொல்றாரு. அதுல குஷ்பூதான் ஹீரோயின். பர்ஸ்ட் நைட் எப்படி நடக்குமா நடக்காதாங்கறதுதான் கதை.

அது சரியா செட்டாகலன்னதும் கார்த்திக்கிடம் தெய்வவாக்கு கதையை சொல்றாரு. ரேவதி குறி சொல்ற பொண்ணு. இந்தக் கதைக்கு குஷ்பூ செட்டாகமாட்டாருன்னு ரேவதியைப் போட்டாச்சு. அப்போ பொள்ளாச்சில சூட்டிங். முதல் நாளே மது போதையின் உச்சத்துல இருந்தாரு. அதனால கார்த்திக்கிடம் பேசுறேன்.

என்னோட முதல் படம் இப்படி ஆகிடுச்சேன்னு ஃபீல் பண்றேன். உடனே சரி. விடுங்கன்னு கார்த்திக் அசிஸ்டண்ட் ஒருவரை வைத்து 28 நாள் பிரமாதமாக டைரக்ட் பண்ணிட்டாரு. பாட்டாலே சொல்லி அடித்தேன் பாடலைக்கூட அவரு தான் டைரக்ட் பண்ணினாரு.

அவருக்கு அவ்ளோ திறமை இருந்தது. சென்னைக்கு வந்து எடிட்டிங்லாம் பார்த்தாரு. அப்புறம் கிளைமாக்ஸ், 2 பாட்டு மட்டும் ஆர்.வி.உதயகுமார் டைரக்ட் பண்ணினார். கார்த்திக் சார் எடுத்த ஷாட்ஸ் எல்லாம் தனியா தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பொதுவாகவே கார்த்திக் சூட்டிங்ஸ்பாட்டுக்கு லேட்டா வருவாரு. சரியா ஒத்துழைப்பு கொடுக்க மாட்டாரு. கால்ஷீட் விஷயத்துல சொதப்புவாருன்னு தான் எல்லாருமே அவரைப் பத்தி நெகடிவா சொல்வாங்க. ஆனா இங்கு தயாரிப்பாளர் சொன்னது நமக்கே ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top