Box Office
பெத்த லாபம் பார்த்த விநியோகஸ்தர்.. ரெட்ரோ சூர்யாவுக்கு வைர மோதிரத்தை பரிசாக கொடுத்துட்டாரே!
Published on
சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2 டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், விது, நாசர், பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படம் திரை அரங்குகளில் வெளியாகி முதல் வார இறுதியில் உலகம் முழுவதிலும்104 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து.
உடனடியாக இந்த வெற்றியை கொண்டாடும் வகையிலும் , படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், மீடியாவுக்கும் நன்றி தெரிவிப்பதற்காக படக் குழுவினர் மே 7ம் தேதி லீலா பேலஸில் வெற்றி விழா கொண்டாட்டத்தை நடத்தினர். மாதம்பட்டி ரங்கராஜ் சமையலில் பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவுகளை அனைவரும் ஒரு பிடி பிடித்தனர்.
சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திரையுலகினரும், படக் குழுவினரும், ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் ‘ரெட்ரோ’ படத்தை தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் விநியோகம் செய்த சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் உரிமையாளரான சக்தி வேலன், படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நாயகனான சூர்யாவிற்கும் வைர மோதிரங்களை பரிசாக அளித்தார்.
இது தொடர்பாக விநியோகஸ்தர் சக்தி வேலன் பேசும்போது, ”ரெட்ரோ திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட வாய்ப்பளித்த 2D நிறுவனத்திற்கும், சூர்யா அண்ணன் மற்றும் ராஜசேகர பாண்டியன் அண்ணன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. மேலும் இந்த படத்தை, இவ்வருடத்தில் வெளியான திரைப்படங்களில் அதிக லாபம் தந்த திரைப்படமாக அமைந்தது ரொம்பவே சந்தோஷத்தை கொடுத்தது. இத்திரைப்படம் உருவாக காரணமான தயாரிப்பாளர்கள் மற்றும் முக்கிய கலைஞர்களான இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசியர், ஒளிப்பதிவாளர் போன்றவர்களுக்கு வைர மோதிரங்களை பரிசாக வழங்கினோம்.
சூர்யா அண்ணாவிற்கு மோதிரம் வழங்கிய போது அதனை உடனடியாக மீண்டும் எனக்கே திரும்ப அணிவித்து, தன் அன்பையும் ஆதரவையும் பகிர்ந்து கொண்டார், அது என் வாழ்வில் மற்றொரு நெகிழ்வான தருணமாக மாறியது. இந்நெகிழ்ச்சி எனக்கு முதல் முறையல்ல, முன்பு ‘கடைகுட்டி சிங்கம்’ வெற்றி விழாவில் தங்க செயின் மற்றும் ‘விருமன்’ வெற்றி விழாவில் வைர பிரேஸ்லெட் பரிசாக வழங்கும் போதும் சூர்யா அண்ணா எனக்கே அதை திரும்ப அணிவித்தார்.” என்றார்.
1000 கோடி வசூலை தாண்டிய தெலுங்கு படங்கள்: முன்பெல்லாம் 100 கோடி வசூலையே மலையாள படங்கள் தொடாது. தமிழ் மற்றும் ஹிந்தி...
புதுப்படங்கள் ரிலீஸ்: ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகிறது ஆனால் அவை எல்லாமே வெற்றி படங்களாக அமைவதில்லை. கடந்த வாரம்...
Captain Prabhakaran: ஆர்.கே செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்தின் நூறாவது திரைப்படமாக 1991ம் வருடம் வெளியான திரைப்படம்தான் கேப்டன் பிரபாகரன். அதிரடி ஆக்சன்,...
Coolie collection: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி ரஜினி நடித்த கூலி திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய ஹைப்பை உருவாக்கியது.ரஜினியோ...
BlackMail: ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய திரைப்படங்கள் வெளியானாலும் எல்லா படங்களுமே ரசிகர்களை திருப்திப்படுத்துகிறதா? வெற்றிகரமாக அமைகிறதா? என்பதை கணிக்க முடியாது.எவ்வளவு பெரிய...