latest news
இரட்டை வேடப்படங்களில் மிகப்பெரிய ஹிட் எது? டாப் 10 பார்க்கலாமா?
Published on
தமிழ்த்திரை உலகில் ஹீரோக்கள் இரட்டை வேடங்களில் நடிப்பது ஒரு வித்தியாசமான உணர்வைத் தரும். அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும். அந்த வகையில் இரட்டை வேடப்படங்கள் நிறைய வந்துள்ளன. அவற்றில் டாப் 10 எதுன்னு பார்க்கலாமா?
10வது இடத்தில் இருப்பது மன்மதன். 2004ல் வெளியானது. முருகன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் சிம்பு அண்ணன், தம்பி என இரட்டை வேடத்தில் நடித்தார். மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
9வது இடத்தில் இருப்பது வாலி. 1999ல் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியானது. தேவா இசை அமைத்துள்ளார். அஜித் அண்ணன், தம்பி என இரட்டை வேடம். ஒருவர் ஊமையாக நடித்து அசத்தினார். பாக்ஸ் ஆபீஸ்ல ஹிட் அடித்தது.
8வது இடத்தில் இருப்பது வாரணம் ஆயிரம். 2008ல் வெளியானது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். சூர்யா அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். பல கெட்டப்ல வந்து அசத்துவார் சூர்யா. 7வது இடத்தில் இருப்பது விஜய் நடித்த கத்தி. முருகதாஸ் இயக்கத்தில் 2014ல் வெளியானது. சமந்தா ஹீரோயின்.
6வது இடத்தில் இருப்பது சூர்யவம்சம். 1997ல் விக்ரமன் இயக்கத்தில் வெளியானது. எஸ்ஏ.ராஜ்குமார் இசை அமைத்துள்ளார். சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்துள்ள மெகாஹிட் படம். 5வது இடத்தில் இருப்பது அமைதிப்படை. 1994ல் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியானது. சத்யராஜ் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அமாவாசையாக வந்து சத்யராஜ் கலக்கிய படம் இதுதான்.
4வது இடத்தில் இருப்பது இந்தியன். 1996ல் ஷங்;கர் இயக்கத்தில் வெளியானது. கமல் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் அருமையாக நடித்துள்ளார். இது ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம். இந்தியன் தாத்தாவாக வந்து கமல் அதிரடி காட்டியுள்ளார்.
3வது இடத்தில் இருப்பது வானத்தைப் போல. 2000த்தில் விக்ரமன் இயக்கத்தில் வெளியானது. விஜயகாந்த் அண்ணன், தம்பி என இரட்டை வேடத்தில் நடித்து அசத்தினார். அருமையான குடும்பத் திரைப்படம். பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனை படைத்த படம்.
2வது இடத்தில் இருப்பது அருணாச்சலம். 1992ல் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியானது. தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார். பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தது.
முதல் இடத்தில் இருப்பது உலகம் சுற்றும் வாலிபன். 1973ல் எம்ஜிஆர் தயாரித்து இயக்கிய படம். மஞ்சுளா, லதா உள்பட பலர் நடித்துள்ளனர். எம்ஜிஆர் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அந்தக் காலத்திலேயே மிகப்பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட படம் இது. நல்ல வசூலை ஈட்டிய படம் இது.
Vijay TVK: கடந்த 27ஆம் தேதி கரூரில் தவெக கட்சி சார்பாக தேர்தல் பரப்புரை நடத்தப்பட்டது. அந்த கட்சியின் தலைவர் விஜய்...
தனுஷ் நடித்த பொல்லாதவன் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக களமிறங்கியவர் வெற்றிமாறன். இவர் பாலு மகேந்திராவின் சீடர்களில் ஒருவர். வெற்றிமாறனின் முதல்...
Karur Vijay: நடிகரும் தவெக தலைவருமான விஜய் கடந்த சனிக்கிழமை இரவு 7 மணி அளவில் கரூர் சென்றிருந்த போது அவர்...
கரூரில் நடந்த கோர சம்பவம் : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வாரந்தோறும் ஒவ்வொரு சனிக்கிழமையின் போதும் தனது தேர்தல்...
Karur: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார். வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலை குறி...