Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

மீனா அமைதியாக இருக்க கதிர் நிறுத்தி பணத்தினை எப்படி ஏற்பாடு செஞ்சீங்க எனக் கேட்க மீனா என்ன பேங்கில் தான் எடுத்துட்டு வந்ததாக சொல்கிறார். ஆனால் கதிர் எனக்கு எல்லா விஷயமும் தெரியும். அண்ணன் சொல்லிவிட்டார் என்கிறார்.

நீங்க எப்படி அவ்வளவு பெரிய அமெளண்ட்டை ரெடி செஞ்சீங்க எனக் கேட்க அப்பாவிடம் கேட்டு வாங்கிவந்து விட்டேன் என்கிறார் மீனா. பின்னர் கதிர் அப்போ அண்ணனோட வேலை எனக் கேட்க அது அப்பா பாத்துப்பாரு எனக் கூறிவிடுகிறார்.

கடைக்கு போன செந்தில் மீனாவுக்கு கால் செய்ய அந்த போனை கோமதி எடுக்கிறார். என்னடா விஷயம் எனக் கேட்க மீனா வெளியில் போய் இருக்கா வந்தோன சொல்றேன். என்ன சொல்லணும் எனக் கேட்கிறார். செந்தில் விளையாட்டாக லவ் யூ சொன்னேனு சொல்லுங்க அம்மா எனச் சொல்லிவிட்டு வைக்கிறார்.

இதை கேட்கும் கோமதி பதட்டத்தில் உளறுகிறார். ராஜி மற்றும் மீனா என்னவென்று கேட்க கோமதி செந்தில் போன் செய்ததாக சொல்கிறார். நான் எடுத்து பேசுனேன். அவன் உன்ன ஐ எனச் சொல்ல தொடங்கி பின்னர் சமைக்க நேரமாச்சு என ஓடி விடுகிறார்.

ராஜி நீங்க ஓகேவா எனக் கேட்க மீனா ஓகே தான் என்கிறார். பின்னர் ரூமில் மீனா இருக்க செந்தி வந்து அமர்கிறார். நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். அப்பாக்கிட்ட உண்மையை சொல்ல தான் நினைச்சேன். அதுக்குள்ள நீங்க வந்துட்ட எனக் கேட்கிறார்.

பணத்தை எப்படி ஏற்பாடு செஞ்ச எனக் கேட்க மீனா முதலில் தயங்குகிறார். பேங்கில் நீங்க பணத்தை போடாத போதே நான் லோனுக்கு ரெடி பண்ணிட்டேன். நல்லவேளை சரியா லோன் கிடைச்சிட்டு என்கிறார். அதுனால பிரச்னை முடிஞ்சிது எனக் கேட்கிறார்.

பின்னர் காலையில் பாண்டியன் கதிரை அழைத்து திட்டி கொண்டு இருக்கிறார். வச்ச நாலு அரியரை எப்போ எழுதி பாஸ் செய்வ எனக் கேட்க கதிர் அமைதியாக இருக்கிறார். கார் ஓட்டுறதுல நீ வாங்குற சம்பளத்துக்கு 100 ரூபாய் அதிகமாக தருவேன் என்கிறார். செந்திலும், பழனியும் சிரித்து கொள்கின்றனர்.

ஆனால் கதிர் நான் வரமாட்டேன் என முரண்டு பிடிக்கிறார். படிச்சு முடிச்சிட்டு உன் சொந்த காலில் நில்லு என பாண்டியன் திட்டுகிறார். பாண்டியன் கடைக்கு செல்ல செந்தில் மற்றும் பழனி வந்து எஸ்கேப்பாக பார்க்க பாண்டியன் பார்த்து விடுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *