Connect with us

Cinema News

பிக் பாஸ் டைட்டில் வின்னரின் பன் பட்டர் ஜாம் சீன்!.. தளபதி என்ன சொன்னார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ’பிக் பாஸ் தமிழ் சீசன் 5’ நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றியாளராக பலராலும் அறியப்பட்ட ராஜூ ஜெயமோகன் நடித்துள்ள பன் பட்டர் ஜாம் படத்தின் பிரத்யேக காட்சி வெளியாகியுள்ளது.

நடிகர் ராஜூ ஜெயமோகன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை, ஆண்டாள் அழகர் மற்றும் சரவணன் மீனாட்சி போன்ற பிரபல தொடர்களில் நடித்தார். மேலும், நட்புனா என்னானு தெரியுமா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதை தொடர்ந்து மனிதன், முருங்கைக்காய் சிப்ஸ், டான் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும், விஜய் தொலைக்கட்சிகளில் தொகுப்பாளராக தொடங்கிய சிவகார்த்திக்கேயன் போல ரக்‌ஷன், மாக்காப்பா ஆனந்த் போன்ற பலரும் படங்களில் நடித்து வரும் நிலையில் ராஜூவும் சீரியலை விட்டு தொகுப்பாளராக சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது குக் வித் கோமாளி சீசன் 6லும் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அவர் நடித்த பன் பட்டர் ஜாம் படத்தின் ஸ்நீக் பீக் வெளியாகியுள்ளது.

பன் பட்டர் ஜாம் படத்தில் ராஜூவுக்கு அம்மாவாக சரண்யா பொன்வண்ணனும், அப்பாவாக சார்லியும் நடித்துள்ளனர். காதல், கல்யாணம் எல்லாம் பிடிக்காத அம்மா தன் மகன் முதல் நாள் கல்லூரிக்கு சென்று வந்ததும் நடந்ததைக் கேட்டு தொல்லை செய்கிறார். அதற்கு மகன் கூறும் விளக்கத்தை கேட்டு நல்ல குழந்தை என அழுதுக்கொண்டே போவது போல் அந்த காட்சி உள்ளது.

குறைந்த பட்ஜெட் படமாக இருந்தாலும் டூரிஸ்ட் ஃபேமிலி போல கதை அமைந்தால் ரசிகர்களால் வரவேற்கப்படும். இல்லை என்றால் பெறிய பட்ஜட் படமாக இருந்தாலும் தக் லைஃப் மற்றும் ரெட்ரோ போல ட்ரோல் செய்யப்பட்டு தோல்வியடையும். பிரதீப் ரங்கநாதன் டிராகன் போல காலேஜ் சப்ஜெக்ட்டில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜோ பட ஹீரோயின் ஜோடியாக நடித்திருக்கிறார்.

இந்த ஸ்நீக் பீக்கை பார்த்துவிட்டு தளபதி விஜய் உடனடியாக சூப்பர் என பாராட்டினார் என்கிற ட்வீட்டையும் போட்டு விஜய் ரசிகர்களையும் கவர் செய்து வருகிறார் ராஜு ஜெயமோகன்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top