Connect with us

Cinema News

மிஸ் யூஸ் பண்ணாம இருக்க இப்படி ஒரு டிரிக்கா? விஜயின் நம்பரை இனி இப்படி தேடாதீங்க

இன்று விஜய் தன்னுடைய 51 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்தநாள் பரிசாக அவர் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் ஒரு சின்ன கிளிம்ப்ஸ் வீடியோவும் வெளியானது. ஏற்கனவே ஜனநாயகன் திரைப்படம் பாலையா நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்று சொல்லப்பட்ட நிலையில் நேற்று வெளியான இந்த வீடியோவை பார்க்கும் பொழுது ஓரளவு அது கன்ஃபார்ம் ஆகியுள்ளது.

படத்தில் விஜய் போலீஸ் கெட்டப்பில் நடித்திருக்கிறார். அதில் வெளியான வசனமும் தீப்பொறி மாதிரி அனைவரையும் சுட்டெரிக்கும் வகையில் அமைந்தது தான் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய் பற்றி அவருடைய நீண்ட நாள் நண்பரான ஸ்ரீநாத் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார் .விஜயுடன் சேர்ந்து அவருக்கு நெருக்கமான நண்பர்கள் என்றால் ஐந்து பேர்.

அதில் ஸ்ரீநாத் மற்றும் சின்னத்திரை நடிகர் சஞ்சீவ் ஆகிய இருவரும் அடக்கம். அதில் ஸ்ரீநாத் விஜயின் போன் நம்பரை மாப்பு என்றுதான் தன்னுடைய ஃபோனில் பதிந்து வைத்திருக்கிறாராம். விஜய் சில சமயங்களில் போன் நம்பரை மாற்றிக் கொண்டே இருப்பாராம் .அப்படி மாற்றும் பட்சத்தில் ஏற்கனவே பதிந்து வைத்திருக்கும் பெயருடன் நியூ என்று சேர்த்துக் கொள்வாராம்.

விஜய் அவருடைய நம்பரை எல்லோருக்கும் கொடுக்க மாட்டார். அவருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே கொடுப்பார். ஏனெனில் அவர் நம்பரை வேறு யாரும் மிஸ் யூஸ் பண்ணி விடக்கூடாது என்ற காரணத்தினால் அதிகமாக ஷேர் செய்ய மாட்டார். அதைப்போல நானும் அவருடைய நம்பரை தளபதி என பதிய மாட்டேன் .திடீரென என்னுடைய போன் வேறு யாரிடமாவது கிடைக்கும் பட்சத்தில் விஜயின் நம்பரை எடுத்து மிஸ் யூஸ் பண்ண கூடாது என்ற காரணத்தினால் மாப்பு அல்லது VJ மாப்பு என்றுதான் பதிந்து வைத்திருப்பேன்.

இப்படி இருக்கும் பட்சத்தில் இது விஜயின் நம்பர் என யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இது எங்களுக்குள் இருக்கிற code word என ஸ்ரீநாத் கூறினார். அது மட்டுமல்ல படிக்கும் காலத்தில் அடிக்கடி சந்தித்து கொள்வது வழக்கம். திருமணம் ஆன பிறகு அது அப்படியே படிப்படியாக குறைந்தது. இப்போது படத்திலும் அரசியலிலும் பிசியாக இருப்பதால் அவருடைய பிறந்தநாள் அல்லது வேறொரு முக்கியமான தினம் இப்படித்தான் நாங்கள் சந்தித்துக் கொள்கிறோம் .

vijay

vijay

போனில் அடிக்கடி பேசிக் கொள்வோம். அவர் பிசியாக இருந்தால் எப்படியாவது அந்த நாளுக்குள் மீண்டும் தொலைபேசியில் என்னை அழைத்து பேசி விடுவார். ஆனால் மாலை ஏழு மணியிலிருந்து 9 மணி வரைக்கும் அவருக்கான நேரம். அந்த நேரத்தில் டெலிவிஷன் காமெடி என இப்படி அவர் பிஸியாக இருப்பார் என ஸ்ரீநாத் கூறியிருக்கிறார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top