எம்ஜிஆர், விஜயகாந்த் செஞ்சது எல்லாம் தெரியலையா? விஜய் இனியாவது கவனிப்பாரா?

Published on: August 8, 2025
---Advertisement---

விஜய் தவெக கட்சி தொடங்கியதுல இருந்து எப்பவாவது தான் அரசியல் கருத்துகளைப் பேசுகிறார். அதுவும் ஆளும் கட்சியையே எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதுகுறித்து பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் என்ன சொல்றாருன்னு தெரியுமா?

விஜய்க்கு எப்போ அரசியல் கட்சியை ஆரம்பிச்சி ஆட்சியைப் பிடிக்கணும்கற எண்ணம் வந்துட்டோ அப்பவே அவரு படங்கள்ல மெல்ல மெல்ல அரசியல புகுத்துறதுதான் சரி. விஜயகாந்த் கூட அவரோட படங்கள்ல அவரு கட்சிக் கொடியைக் கொண்டு வருவாரு. மோதிரத்துல கூட தேமுதிக இருக்கும். பாரதிராஜா தலைமையில நெய்வேலி அனல் மின்நிலையத்துல பெரிய போராட்டத்துக்குப் போனோம்.

காவிரி கர்நாடகப் பிரச்சனையில் இங்க இருக்குற மின்சாரத்தை அங்கே கொடுக்கக்கூடாதுங்கறதுக்காக ஒரு மனுவா கொடுக்கலாம்னு போனோம். அப்போ கட்சிக்கொடியை யாருமே பயன்படுத்தக்கூடாது. நடிகர் சங்கமாக அதாவது கலையுலகைச் சார்ந்தவர்களாக நாம போவோம்னு தான் முடிவு பண்ணினாங்க.

வெவ்வேறு கட்சியைச் சேர்ந்தவங்க வர்றதனால இப்படித்தான் போகணும்னு தீர்மானமே போட்டாங்க. கரெக்டா ஊர்வலம் ஆரம்பிச்சி வண்டலூர் தாண்டறதுக்குள்ள தேமுதிகவினர் கட்சிக்கொடியோட வந்து கலந்துக்கிட்டாங்க. அப்போ அவரு எவ்ளோ தெளிவா இருந்துருக்காரு. நம்ம கட்சி எல்லா இடங்களிலும் வரணும்னு நினைச்சிருக்காரு.

அந்த மாதிரி தான் விஜயும் ஒவ்வொரு முறையும் தன் கட்சித் தொடர்பான விஷயங்களைச் சொல்லிக்கிட்டே இருக்கணும். அல்லது மக்களுக்காகப் பிறந்தவன் தான் நான். மக்களைக் காப்பாத்த வந்தவன் நான் அப்படிங்கறதை சொல்லிக்கிட்டே இருக்கணும். இதுதான் ஃபார்முலா. எம்ஜிஆர் ஜெயிச்சதுக்கும் அதுதான் காரணம். அதை ஏன் விட்டாருன்னு தான் கேட்க வேண்டியிருக்கு.

ஜனநாயகன்ல ஏதோ கொஞ்சம் பேசுனாருன்னா அது அரசியலாகத்தான் இருக்கும். முதல் கர்ஜனை என்பது அரசியல் மாநாடு தொடங்கும்போதே பேச ஆரம்பிச்சிட்டாரு. விஜய் அன்றாடம் அரசியல் கருத்துகளைச் சொல்லணும். எல்லா விஷயங்களுக்கும் கருத்து சொல்லணும். கருத்துகளை உடனுக்குடன் சொல்லணும். முருகர் மாநாடு தொடர்பாக விஜய் பேசல. அமீர் கூட கோயிலுக்குள்ள அரசியலைக் கொண்டு வராதீங்கன்னு சொல்றாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment