Connect with us

அன்பால் போரை வென்றுவிட்டோம்!.. ஒரேயொரு எமோஜியை போட்டு மீண்டும் பஞ்சாயத்தை கிளப்பிய புளூ சட்டை!..

latest news

அன்பால் போரை வென்றுவிட்டோம்!.. ஒரேயொரு எமோஜியை போட்டு மீண்டும் பஞ்சாயத்தை கிளப்பிய புளூ சட்டை!..

கார்த்திக் சுப்புராஜ் டைரக்‌ஷனில் வெளியான ஒரு சில படங்களை தவிர மற்ற பல படங்கள் பெரிதாக வசூல் ரீதியாக வெற்றிப் பெறவில்லை. ஆரம்பத்தில், பீட்சா, ஜிகர்தண்டா படங்கள் பெரிதும் ரசிகர்களை கவர்ந்தன. இறைவி படத்தில் இருந்தே அடிவாங்கத் தொடங்கிய கார்த்திக் சுப்புராஜின் இயக்கம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் மூலம் தான் மீண்டும் ஏதோ தப்பித்தது.

இந்த ஆண்டு மே 1ம் தேதி சூர்யாவை வைத்து அவரது சொந்த காசுலயே ஒரு படத்தை இயக்கி அதற்கு கல்ட் டைட்டில் கிடைக்காத நிலையில், கடைசியில் ரெட்ரோ என டைட்டில் வைத்து வெளியிட்டார். படத்தை பார்த்த ரசிகர்கள், இந்த படத்தை விட கம்மி பட்ஜெட்டில் வெளியான புதுமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கிய டூரிஸ்ட் ஃபேமிலி தான் வொர்த் என அந்த படத்தை கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.

2டி நிறுவனம் தயாரிப்பில் வெளியான ரெட்ரோ படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், பிரகாஷ் ராஜ், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அந்த படம் வசூல் ரீதியாக சொதப்பி விட்டதாக கூறப்பட்ட நிலையில், 230 கோடி வரை லாபத்தை இந்த படம் கொட்டிக் கொடுத்துள்ளது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

இந்நிலையில், 50 நாட்களை ரெட்ரோ திரைப்படம் கடந்து விட்டது என்றும் ரிலீஸுக்குப் பிறகு பெரும் போரையே நாங்கள் அன்பால் எதிர்கொண்டோம் என கார்த்திக் சுப்புராஜ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.

அந்த ட்வீட் குறித்த கார்டு செய்தியை பார்த்துவிட்டு புளூ சட்டை மாறன் ஸ்மைலி எமோஜிக்களை போட்டு மீண்டும் போரை ஆரம்பித்துள்ளார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் சுமாரான படங்கள் வெளியானால் கூட அதிகள்விலான நெகட்டிவிட்டியை பரப்பி காலி செய்கின்றனர் என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top