Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
மீனா தன்னுடைய அலுவலகத்தில் உட்கார்ந்து என்ன செய்யலாம் என யோசித்து கொண்டு இருக்கிறார். அப்போ செந்தில் வர எதுக்கு அப்பாக்கிட்ட இந்த விஷயத்தை சொல்லலை எனக் கேட்க ஏற்கனவே வீட்டுல நிறைய பிரச்னை என்கிறார்.
என்னைக்காது மாமா அவசரத்துக்கு காசு கேட்டா மாட்டிப்பீங்க எனக் கூற செந்தில் அப்படி எந்த விஷயமும் வராது என்கிறார். மீனா தன்னுடைய அப்பாவுக்கு கால் செய்ய வீட்டுக்கு வா எனக் கேட்க ஒருநாளைக்கு நீங்க வரக்கூடாதுனு சொன்னீங்க.
இன்னைக்கு வானு சொல்றீங்க என்கிறார். சரி எதுக்கு காசு வாங்குனீங்க எனக் கேட்க என் செலவுக்கா வாங்குனேன் என அவரும் கொடுத்து விட்டதாக கூறுகிறார். மீனா தன்னுடன் வேலை செய்பவரிடம் 10 லட்சம் கேட்க அவர் என்னிடம் அவ்வளோ காசு இல்லையே என்கிறார்.
உடனே மீனா இல்ல எப்படி ரெடி செய்யலாம் எனக் கேட்கிறார். அவர் 10 லட்சம் கடன் வாங்கலாம் எனக் கூற அவரும் கிடைக்குமா எனக் கேட்க எல்லா டாக்குமெண்ட் இருந்தால் கிடைக்கும் என்கிறார்.
பின்னர் வீட்டில் தங்கமயில் அப்பா அம்மா பேசிக்கொண்டு இருக்கின்றனர். கோயிலுக்கு போகலாம் என பிளான் செய்ய தங்கமயிலை அழைத்து செல்லலாம் என்கிறார். அவர் அப்பா மயிலிடம் சொல்லிவிட்டு செல்ல தங்கமயில் அம்மா என்ன இப்படி சொல்ற எனக் கேட்க நான் வர மாட்டேன்.
என் வீட்டுக்கு போக முடியாது. என் புருஷன் கூப்பிட வரமாட்டாரு. நான் எங்கையாது போறேன் என்கிறார். அட அன்னைக்கு நீ தலைக்கு ஊத்திப்ப என மயில் அம்மா கூற அப்போது தான் தங்கமயிலும் யோசிக்கிறார். நான் கடந்த மாதமே தலைக்கு ஊத்திக்கலை என்கிறார்.
அவர் சந்தோஷப்பட்டு அப்போ நீ கர்ப்பமா இருக்கியா எனக் கேட்க அப்படி எந்த அறிக்குறியும் தெரியலையே என்கிறார். உடனே காசை எடுத்துக்கொண்டு சந்தோஷமாக மெடிக்கல் போய் டெஸ்ட் கிட்டை வாங்கிக்கொண்டு வந்து கொடுக்கிறார்.
அதை எடுத்து சென்ற தங்கமயில் செக் செய்து பார்க்க இரண்டு கோடு வந்து விடுகிறது. சந்தோஷமாக வந்து தன் அம்மாவுடன் சொல்ல அவர் அப்படினா என்ன எனக் கேட்க தான் கர்ப்பமா இருப்பதாக சொல்கிறார்.
சந்தோஷத்துடன் சரவணனுக்கு கால் செய்ய அவர் போனை எடுக்காமல் விடுகிறார். பின்னர் வாய்ஸ் மெசேஜ் போட அவர் அதை கேட்டு விட்டு மறுபடியும் வாய்ஸ் மெசேஜ் போடுகிறார். என்னவென்று பார்த்தால் மறுபடியும் பொய் சொல்றீயா எனக் கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறார்.
