Connect with us

latest news

Siragadikka Aasai: விஜயாவிற்கே விபூதி அடித்த ரோகிணி… யாருக்கு யாரு வில்லினே தெரியலையப்பா?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

அருண் நானும் சீதாவும் பதிவு திருமணம் செய்து கொள்ளப் போகிறோம். இதற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும் என மீனாவிடம் கேட்கிறார். அம்மாவிடம் சொல்லிவிட்டு இதை செய்யலாம் என மீனா கூட இப்போதைக்கு இந்த விஷயம் நம்ம மூணு பேர தவிர யாருக்கும் தெரிய வேண்டாம்.

எனக்கு உங்க கணவரும் எங்க அம்மாவும் இது ஒத்துக்குறாங்களோ அப்ப இந்த விஷயத்தை வெளியில் சொல்லலாம் என்கிறார். சீதாவிடம் உன் முடிவு என்ன என கேட்க என்னால் யாருடைய வாழ்க்கையும் கெட்டுப் போய்விடக்கூடாது என்கிறார். மீனா இப்போ நாம் சீதாவோட அப்பா ஸ்தானத்திலிருந்து முடிவெடுக்க வேண்டியதா இருக்கு என்கிறார்.

உடனே அருண் அப்போ உங்களுக்கு கல்யாணத்துக்கு சம்மதமா எனக் கேட்க உடனே சொல்ல முடியாது. கொஞ்சம் டைம் வேணும் என கேட்கிறார். விஜயா, மனோஜ் மற்றும் சாமியாரை வந்து சந்திக்கின்றனர். இதை ரோகிணி ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.

மனோஜின் கையில் விஜயா கட்டிய தாயத்தை கழட்ட கூறுகிறார். நான் கொடுத்த தாயத்தில் தப்பா போயிடுச்சு. அதான் உடனே கழட்ட சொன்னேன். உங்களின் உயிரை எடுக்க எமன் பாசக்கயிறுடன் வாசலில் காத்திருப்பதாக விஜயாவை மிரட்டுகிறார்.

இதனால் அதிர்ச்சியாக என்ன செய்வது எனக் கேட்க உங்க உயிரை காப்பாற்றிக் கொண்டிருக்கும் காவல் தேவதையே உங்க மருமகள் தான் எனக் கூறுகிறார். அவரை நீங்கள் பிரிக்க பார்த்தால் உங்கள் வாழ்க்கை முடிந்துவிடும் என பயமுறுத்துகிறார்.

உடனே விஜயாவிடம் இனி நீங்க நைட்டு படுக்கும்போது சிவப்பு சேலை தான் கட்ட வேண்டும் என கூறுகிறார். இதெல்லாம் கேட்டுவிட்டு இவர்கள் வெளியில் வர விஜயா குழப்பத்தில் இது யாரோ சொல்ல வச்ச மாதிரி தெரியுது என்கிறார். மனோஜ் அவரே சந்தேகப்படாதம்மா எனக் கூறி குழப்பி விடுகிறார்.

இது ஏதோ தப்பா இருக்கு இதை நான் பார்த்துக் கொள்கிறேன் என விஜயா கிளம்பி விடுகிறார். ரோகிணி சந்தோஷமாக வந்து நன்றி சொல்லிவிட்டு கிளம்ப நீ உண்மையா இருந்தாலே உன் வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் இருக்காது எனக் கூறி விடுகிறார். இதனால் ரோகிணி முகம் மாறி விடுகிறது.

கோயிலில் மீனா குழப்பத்தில் இருக்க அருணின் அம்மாவை சந்திக்கிறார். அவர் உங்க குடும்பத்து சம்மதத்திற்காக ரொம்ப காத்து இருந்தாச்சு. எனக்கு இருக்கிறது ஒரே மகன். இனிமே என்னால பொறுத்திருக்க முடியாது. வந்திருக்க சம்மதத்தில் ஒரு பொண்ணை பார்த்து கட்டி வைப்பதாக இருக்கிறேன் என்கிறார்.

பின்னர் முத்து ஒரு டிரைவரை பார்த்து மாப்பிள்ளை அழைத்து வர இவரை விட சீதா அதிகமாக படிச்சிருக்கா எப்படி சரியா இருக்கும் என கூறுகிறார். உடனே முத்துவும் ஒரே வீட்டில் இரண்டு டிரைவர்கள் யோசிக்கிற என மனம் நொந்து அங்கிருந்து சென்று விடுகிறார்.

மீனா குழப்பத்தில் இருப்பதை பார்த்த ஐயர் என்ன விஷயம் என கேட்க சீதாவிற்கு வந்த வரன் பற்றி கூறுகிறார். பின்னர் அவர் எதுவாக இருந்தாலும் சீட்டு போட்டு அதன் முடிவா செஞ்சிரு என்கிறார். சீதாவும் பதிவுத்திருமணம் வேண்டும், வேண்டாம் என சீட்டை எழுதுகிறார்.

Continue Reading

More in latest news

To Top