கதையே கேட்க டைம் இல்ல.. இவர வச்சு படம் பண்ண மாட்டேன்! எஸ்.ஏ.சி சொன்ன நடிகர்

Published on: August 8, 2025
---Advertisement---

தமிழ் சினிமாவில் புரட்சிகரமான தன்னுடைய கருத்துக்களாலும் வசனங்களாலும் தனி முத்திரையை பதித்தவர் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர். 70-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கிறார். அதில் 17 படங்கள் விஜயகாந்த் வைத்து மட்டும் எடுத்து இருக்கிறார் .விஜயகாந்த் கெரியரில் மிக முக்கிய பங்கு வகித்தவர் எஸ் ஏ சந்திரசேகர். இவர் எடுத்த அத்தனை படங்களும் விஜயகாந்துக்கு ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

அதனாலயே விஜயகாந்த் எஸ்ஏ சந்திரசேகரை கடைசிவரை தன் குருவாக மிகவும் பயபக்தியுடன் அவருக்கு மரியாதை கொடுத்து வந்தார். அதனால் தான் செந்தூரப்பாண்டி படத்தில் சம்பளமே வாங்காமல் கெஸ்ட் ரோலில் நடித்து கொடுத்தார் விஜய். தனக்கு செய்த உதவியை எக்காரணம் கொண்டும் எந்த நேரத்திலும் மறக்க மாட்டார் விஜயகாந்த். இந்த நிலையில் sac ஒரு தகவலை பகிர்ந்திருக்கிறார்.

சட்டம் என் கையில், நெஞ்சிலே துணிவிருந்தால் ஆகிய படங்கள் கொடுத்த பிறகு எஸ்ஏசி மார்க்கெட் உயர தொடங்கியது. நெஞ்சிலே துணிவிருந்தால் படத்தை 22 நாட்களில் எடுத்து முடித்திருக்கிறார் .இந்த இரண்டு படங்கள் ஹிட்டானதும் அவருக்கு மற்ற மொழிகளில் வாய்ப்புகள் தேடி வந்திருக்கிறது. தெலுங்கு கன்னடம் ஹிந்தி என பிசியாக போய்விட்டார் எஸ் ஏ சி.

இந்த இடைவெளியில் விஜய்காந்தும் மற்ற மற்ற படங்களில் நடிக்க அவருக்கு சரியான வெற்றி கிடைக்கவில்லை. அதனால் அவருடைய மார்க்கெட் குறைய தொடங்கியிருக்கிறது .தெலுங்கில் எஸ்ஏசி ஒரு படம் எடுக்க அது ஹிட்டாக அந்த படத்தை தமிழில் எடுக்க வேண்டும் என பி எஸ் வீரப்பன் சொல்லி இருக்கிறார். அப்போ இந்த படத்தில் விஜயகாந்த் நடித்தால் நன்றாக இருக்கும் என எஸ் ஏ சி சொல்ல பி எஸ் வீரப்பன் அதற்கு அவருடைய மார்க்கெட் முன்பு மாதிரி இல்லை என ஒரு பிரபல ஹீரோவிடம் அனுப்பி இருக்கிறார் பி எஸ் வீரப்பன்.

vjiayakanth

vjiayakanth

எஸ்ஏசி அவர் வீட்டுக்கு போக அந்த நேரத்தில் அந்த ஹீரோ வேறொரு படப்பிடிப்பிற்காக சென்று விட்டாராம் .அதனால் நாளை கதை கேட்கிறேன் என சொல்லி இருக்கிறார். இதை பி எஸ் வீரப்பனிடம் கதை கேட்க நேரமில்லாத ஒரு நடிகருடன் என்னால் பணியாற்ற முடியாது என சொல்லி இந்த படத்தில் விஜயகாந்தை நடிக்க வைக்கிறேன். எனக்கும் சம்பளம் வேண்டாம் .விஜயகாந்துக்கும் சம்பளம் வேண்டாம் .பத்தாயிரம் கொடுத்தால் போதும் என சம்பளமே வாங்காமல் இந்த படத்தில் நடித்து கொடுத்திருக்கிறார்கள். அந்த படமும் பெரிய அளவு ஹிட் ஆகியிருக்கிறது. இதை ஒரு பேட்டியில் எஸ்ஏசி பகிர்ந்திருக்கிறார்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment