Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.

பாண்டியன் வீட்டு வாசலில் கிளம்பிக்கொண்டு இருக்க எதிர் வீட்டில் குமார் பைக்கில் உட்கார்ந்து இருக்கிறார். அரசியை சத்தம் போட்டு அழைத்து தன்னுடைய பர்ஸை எடுத்து வரச் சொல்லுகிறார். அப்போ அரசி எதிரே அப்பா இருப்பதை பார்த்து அமைதியாக எடுக்க செல்கிறார்.

அவர் எடுத்து வர வேறு ஒருத்தர் பர்ஸாக இருப்பதை பார்த்து குமார் அரசியை கொட்டுகிறார். இதை பார்த்து பாண்டியன் கடுப்பாக அவரை இன்னும் வெறுப்பேற்றி பார்க்க அரசியை திட்டுகிறார். பாண்டியன் கோபமாக அங்கிருந்து கிளம்பிவிடுகிறார்.

உள்ளே சக்திவேல் சாப்பிட்டு விட்டு போக குமார் வர அவருக்கு பரிமாற போகிறார் குமார் அம்மா. ஆனால் குமார் வேண்டாம் நீங்க போங்க என்னோட பொண்டாட்டி வந்து சாப்பாடு பரிமாறுவா எனக் கூறுகிறார். இதனால் குமார் அம்மாவும் போய் அரசியிடம் சொல்லி விட்டு செல்கிறார்.

ஆனால் அரசி எழுந்து செல்லாமல் இருக்க கீழே குமார் காத்திருக்கிறார். ரொம்ப நேரம் கழித்து மேலே வந்து என்ன சாப்பாடு போடாம உட்கார்ந்து இருக்க என்கிறார். ஆனால் அரசி நான் சாப்பாடு போட்டா நீ சாப்பிட்ட போய் சாப்பிடுங்க எனத் திட்டி விடுகிறார்.

பின்னர் ரூமில் டேபிள் சேரை எடுத்து வந்து போட்டு எனக்கு சாப்பாடு போடு எனக் கூறுகிறார். இருந்தும் அரசி வாயை திறக்காமல் உட்கார்ந்து இருக்கிறார். பின்னர் குமார் அம்மா வந்து சாப்பிடலையா எனக் கேட்டு டேபிளை பார்க்க ஓ இங்க சாப்பிட போறீங்களா எனக் கேட்டுவிட்டு செல்கிறார்.

இதனால் அரசி சாப்பாடு எடுக்க கீழே செல்கிறார். இட்லியை எடுத்து வந்து வச்சு பரிமாற இன்னும் வெறுபேற்று கொண்டு இருக்கிறார். உங்க அப்பாவோட மைனஸ் பாயிண்ட் நீதான். உன்னை கொடுமைப்படுத்துனாலே அவரை பழி வாங்குன மாதிரிதான் என்கிறார்.

இதனால் அரசி மேலும் மேலும் கடுப்பாகி இருக்கிறார். தாராளமாக சாப்பாடு பரிமாற என்ன இவ்வளவுதான் கொடுப்பீயா எனக் கூறி உங்க வீட்டுல இப்படி கொடுத்ததால தான் உன் அண்ணன்கள் அப்படி இருக்காங்க என நக்கலடிக்கிறார்.

இதை கேட்டு கடுப்பாகும் அரசி என் அண்ணனை பத்தி பேசாதீங்க என்கிறார். தாராளமாக சாம்பாரை ஊத்துடி என சத்தம் போட இருக்கும் மொத்த சட்டி சாம்பாரை ஊத்திவிடுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *