ரஜினி வேண்டாம்!. கமலை வச்சி எடுங்க!.. மணிரத்னம் சோலிய முடிச்சிவிட்டதே அவர்தானாம்!..

Published on: August 8, 2025
---Advertisement---

Thuglife: மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு முக்கிய வேடத்தில் நடித்து வெளியான தக் லைப் படம் ரசிகர்களிடம் நெகட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. நாயகன் போல ஒரு படமாக இருக்கும் என நம்பி தியேட்டருக்கு போன ரசிகர்கள் ஏமாற்றத்துடன் வெளியே வருகிறார்கள். வழக்கமான கேங்ஸ்டர் படமாகவே தக் லைப் வெளியாகி ரசிகர்களை ஏமாற்றி இருக்கிறது.

அதையாவது ரசிகர்களுக்கு பிடித்தது போல சுவாரஸ்யமாக சொல்லி இருக்கலாம். ஆனால், அதிலும் கோட்டை விட்டிருக்கிறார்கள். சுலபமாக யூகிக்க முடிந்த காட்சிகள், சுவாரஸ்யம் இல்லாத கதை மற்றும் திரைக்கதை, சரியாக எழுதப்படாத கதாபாத்திரங்கள் என படத்தில் மைன்ஸ்கள் ஏராளம். இதனாலேயே படம் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது.

இந்நிலையில், தக் லைப் படம் உருவானதற்கு காரணமே மணிரத்னத்தின் மனைவி சுஹாசினிதான் என சொல்லப்படுகிறது. பொன்னியின் செல்வன் பட விழாவில் ரஜினி கலந்துகொண்டபோது ‘என்னை வைத்து ஒரு படம் இயக்குங்கள்’ என அவர் மணிரத்னத்திடம் கேட்க அவரும் ரஜினிக்காக ஒரு கதையை உருவாக்கினார். அது ரஜினிக்கும் பிடித்து அதில் நடிக்க தாயாரானார்.

ஆனால், கமலின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் ‘ரஜினி எதற்கு?. கமலை வைத்து படமெடுங்கள்’ என சுஹாசினி சொல்ல கொடைக்கானலுக்கு போய் சில நாட்கள் தங்கியிருந்து எழுத்தாளர் ஜெயமோகன் உதவியுடன் ஒரு கதையை உருவாக்கி அதை கமலிடம் சொன்னார் மணிரத்னம், அதைக்கேட்ட கமல் ‘இது தூக்கிப் போடுங்கள்’ என சொல்லிவிட்டு அவர் ஒரு கதையை சொல்லியிருக்கிறார்’. அதில் சில மாற்றங்களை செய்து ஒரு கதையை உருவாக்கினார் மணிரத்னம்.

அப்படி உருவான தக் லைப் படம்தான் இப்போது நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. மணிரத்னம் ஜெயமோகனோடு இணைந்து உருவாக்கிய கதையில் கமல் நடித்திருந்தால் கூட அது ஹிட் அடித்திருக்கும். ஆனால், கமல் அதை வேண்டாம் என சொல்லிவிட்டு தான் ஒரு கதையை கொடுத்து அதை மணிரத்னம் மாற்றி இப்போது ஒரு மொக்கைப் படமாக தக் லைப் உருவாகியிருக்கிறது.

மணிரத்னம் ரஜினியை வைத்து இயக்கி இருந்தால் கூட ஹிட் கொடுத்திருப்பார். சுஹாசினி உள்ளே புகுந்து தனது சித்தப்பா கமலை வைத்து எடுங்கள் என சொல்லி சோலியை முடித்துவிட்டார். மொத்தத்தில் சுஹாசினியும் கமலும் சேர்ந்து மணிரத்னத்தின் இமேஜை காலி செய்துவிட்டார்கள் என்பதே நிஜம்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment