Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

அரசியை வம்பு இழுத்து கொண்டிருக்கும் குமரவேல் காரில் இருந்து இறங்கி ஓட வேண்டியது தானே. எதுக்கு எங்க வீட்டுக்கு வந்த என்னை பழி வாங்கிறதுக்காகவா? நான் நினைச்சா உன் குடும்பத்தை இன்னும் அலற விடுவேன். பாக்குறியா எனச் சொல்லி அரசியை அடிக்க கையை வீசுகிறார். ஆனால் அரசி மேலே படாமல் நகர்ந்து கொள்கிறார். இப்படியே இரண்டு முறை கடுப்பாகி விடுகிறார் குமரவேல்.

இதனால் கோபத்தில் கையை முறிக்கி குத்த அரசி நகர்ந்ததால் குமார் கை மரக்கட்டையில் பட்டு கத்த தொடங்குகிறார். இதை கேட்டு அப்பத்தா மற்றும் குமார் அம்மா ஓடி வர அரசி அவர் கீழே விழுந்து விட்டதாக சமாளிக்கிறார். கடுப்பில் குமார் வெளியில் சென்றுவிடுகிறார்.

அப்பத்தா கட்டில் தனியாக இருப்பதை பார்த்து அரசியை கேள்வி கேட்க குமார் குறட்டை விடுவதாக சொல்லி சமாளிக்கிறார். வெளியில் வரும் அரசி குமாரை என்ன என்னை கதற விடுறேனு சொன்னீங்க. நீங்க கதறுனீங்க போல என நக்கலாக கேட்கிறார்.

அந்த நேரத்தில் பழனி வர அரசி அவரிடம் வீட்டில் எல்லாரும் எப்படி இருக்காங்க எனக் கேட்க அவர் முகம் கொடுத்து பேசாமல் இருக்கிறார். பின்னர் மீனா உன்னிடம் பேசணும் எனச் சொன்னதால் உன்னை கோயிலுக்கு அழைச்சிட்டு வரச் சொன்னா அதான் வந்தேன் என்கிறார்.

அரசியை அழைத்து கொண்டு வர பழனி பேசாமல் வருகிறார். கோயிலுக்கு செல்லும் அரசி அங்கு மீனா மற்றும் ராஜியை பார்க்கிறார். அவர்கள் எதற்காக இப்படி கல்யாணம் பண்ணிக்கிட்ட எனக் கேள்வி கேட்க முதலில் பொய் சொல்லி சமாளிக்கிறார் அரசி.

பின்னர் ராஜி மற்றும் மீனா தொடர்ந்து வற்புறுத்தி கேட்க குமார் போட்டோவை டிசைன் செய்து மிரட்டிய விவகாரம் குறித்து சொல்கிறார். இதை கேட்கும் ராஜி கோபத்துடன் குமாரை அடிக்க போகிறார். அவரை அமைதிப்படுத்தும் மீனா பொறு முழுசா கேட்போம் என்கிறார்.

அப்போ அவன் போட்டோ வச்சி மிரட்டுனதால் கல்யாணம் செஞ்சிக்கிட்டியா எனக் கேட்க அரசி அதற்கும் இல்லை என்கிறார். அப்போ என்ன நடந்துச்சு என மீனா சத்தம் போட மொத்த விஷயத்தினையும் உடைக்கிறார் அரசி. இதை கேட்கும் மீனா மற்றும் ராஜி அதிர்ச்சி அடைகிறார்.

எதுக்கு இந்த தாலி தூக்கி போட்டு வா எனக் கூற அந்த குமார் என்னை நம்ம குடும்பத்தை என்ன செய்யணும் நினைச்சானோ அதை அந்த கஷ்டத்தை அவனுக்கு கொடுக்கணும் எனக் கூறுகிறார். ஆனால் அரசி நான் செஞ்ச ஒரே தப்பு சுகன்யா அத்தைக்கிட்ட பேசுனது தான் என்கிறார்.

அப்போ கல்யாணத்துக்கு முந்தைய நாள் சுகன்யாவுடன் பேசியதையும் அவர் தன்னை அனுப்பியதையும் சொல்ல மீனா கடுப்படித்து கொண்டு இருக்கிறார். எல்லா தெரிஞ்சிட்டுக்கிட்டு தான் எங்க கூட உன்னை தேடுற மாதிரி திரிஞ்சாங்களா என்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *