Connect with us

Cinema News

ரிலீஸூக்கு முன்னாடியே கலெக்‌ஷன் கல்லா கட்டுதே! ஓவர்சீஸில் மாஸ் காட்டும் ‘ஜனநாயகன்’

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ஜனநாயகன். இந்த படம் அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று சொல்லப்படுகிறது. படப்பிடிப்பு எல்லாம் முடிந்து போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகளில் படக்குழு இறங்கியிருக்கிறது. விஜயும் இந்தப் படத்தை முடித்து விட்டு முழு நேர அரசியல் வாதியாக செயல்பட்டு வருகிறார். தற்போது கூட கட்சி உறுப்பினர் சேர்க்கையில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார்.

அதற்கான கூட்டம் பனையூரில் உள்ள அவருடைய கட்சி அலுவலகத்தில் நடந்து வருகிறது. ஜனநாயகன் படத்தை பொறுத்தவரைக்கும் இது அவருக்கு கடைசி படம் என்பதால் அரசியல் தாக்கம் கண்டிப்பாக இந்தப் படத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். ஏற்கனவே பீஸ்ட் படத்தில் விஜயுடன் ஜோடியாக நடித்திருந்தார் பூஜா ஹெக்டே.

இந்தப் படத்தை கேவிஎன் புரடக்‌ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படம் ரிலீஸுக்கு முன்பாகவே இந்தப் படத்தின் ஓவர் சீஸ் பிசினஸ் குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளது. ஓவர் சீஸ் உரிமையை ஃபார்ஸ் என்ற நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. இந்த நிறுவனம் துபாயை மையமாக வைத்து செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம்தான் பல பெரிய படங்களை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். படம் ரிலீஸுக்கு முன்னாலேயே ஓவர்சீஸ் வாங்கியவர்களுக்கு லாபம் கிடைத்துவிடும் போலிருக்கிறது. இந்த நிறுவனம் மற்ற வெளி நாடுகளுக்கு இந்த படத்தை பிரித்துக் கொடுத்து விற்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த வகையில் மலேசியாவில் மட்டும் 12 கோடிக்கு விற்றிருக்கிறார்களாம்.

மலேசியா மட்டும் 12 கோடி என்றால் இப்படி ஒவ்வொரு நாடுகளையும் கணக்குப் போட்டால் எங்கேயோ போய் நிற்கும். மலேசியாவில் மிகப்பெரிய வினியோகஸ்தர் என்றால் அது மாலிக்ஸ் டீம்தான். அவர்கள்தான் இந்தப் படத்தை வாங்கியிருக்கிறார்கள். இவர்களை பொறுத்தவரைக்கும் ஒவ்வொரு படத்தையும் மலேசியாவே திரும்பி பார்க்கும் வகையில் ப்ரோமோஷன் செய்து விடுவார்களாம்.

அப்படித்தான் ஜன நாயகனுக்கும் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் என்னவோ மலேசியாவில் ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கவும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

Continue Reading

More in Cinema News

To Top