Coolie: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் கூலி. இந்த படம் வருகிற ஆகஸ்டு 14ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ரஜினி மட்டுமல்லாமல் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சௌபின் சாஹிர் என பலரும் நடித்துள்ளனர்.
குறிப்பாக நாகர்ஜுனன் இப்படத்தில் வில்லனாகவும், பாலிவுட் நடிகர் அமீர்கான் கோமியோ வேடத்திலும் நடித்துள்ளனர். அனிருத் இசையில் இதுவரை 3 பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்தது. அதிலும் மோனிகா பாடலுக்கு பலரும் நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
வழக்கமாக லோகேஷ் படம் என்றாலே அதில் போதை மருந்து தொடர்பான கேங்ஸ்டர் இருப்பார்கள். அவர்களை ஹீரோ தனி ஒருவராக ஒழித்துக்கட்டுவார். மேலும் விதவிதமான துப்பாக்கிகளை வைத்து வில்லனின் ஆட்களை மொத்தமாக போட்டுத்தள்ளுவார். இதுவேதான் கூலி படத்திலும் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்,
ஆனால் கூலி படத்தில் இவை எதுவும் இருக்காது என லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார், இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய அவர் கூலி படத்தில் துப்பாக்கி, போதை மருந்து, குடோன் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஆகியவை இருக்காது, இது டைம் டிராவல் சம்பந்தப்பட்ட படமும் இல்லை, கூலி படம் முழுக்க முழுக்க காஸ்ட்லியான வாட்ச் மற்றும் அது தொடர்பான தொழிற்சாலைகள் சம்பந்தப்பட்டது என சொல்லியிருக்கிறார்,
