பன் பட்டர் ஜாம் படம் எப்படி இருக்கு? 2கே கிட்ஸே தான் வேணுமா? வேற யாரும் பார்க்க வேணாமா?

Published on: August 8, 2025
---Advertisement---

இந்தப் படத்துல பிளஸ் 2 படிக்கக்கூடிய கதாநாயகன், கதாநாயகியின் பெற்றோர்கள் ஒரு கல்யாண வீட்டுக்குப் போறாங்க. அங்கே ஒருவருக்கொருவர் தங்களது பிள்ளைகளைப் பற்றிப் பெருமையாகப் பேசுறாங்க.

இதுல அவங்க ரொம்பவே இம்ப்ரஸாகி ஒரு பேச்சுக்கு சம்பந்தியாகிடுறாங்க. ஆனா படத்துல ஹீரோ, ஹீரோயின் நமக்கு லவ் மேரேஜ்னு நினைக்கிறாங்க. ஆனா இவங்களைப் பொருத்தவரை அது அரேஞ்ச்டு மேரேஜ். அது வெற்றிகரமாக நடந்ததா இல்லையா என்பதே கதை.

90ஸ் கிட்ஸ்களுக்கு பிரபலமான படம் பிரியாத வரம் வேண்டும். பிரசாந்த், ஷாலினி நடித்தது. அந்த வகையில இந்தப் படம் 2கே கிட்ஸ்க்கு ஒரு பிரியாத வரம் வேண்டும் என்றே சொல்லலாம். ஒரு பக்கம் காமெடி, ஒரு பக்கம் எமோஷன்ஸ்னு படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ராகவ் மிர்தா.

படத்தின் கதாநாயகன் பிக்பாஸ் ராஜூ. கதாபாத்திரத்திற்கேற்ற அருமையான நடிப்பு. வாரணம் ஆயிரம் சூர்யா ஸ்டைலில் ஹீரோயினிடம் புரொபோஸ் பண்றாரு. அருமையாக உள்ளது. சில இடங்களில் டூமச் நடிப்பு வருது. பவ்யா த்ரிகா கதாநாயகியாக நடித்துள்ளார். சில இடங்களில் நல்ல நடிப்பு.

ஆதியா பிரசாத், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கத்துரை, சார்லி என அனைவரும் அருமையாக நடித்துள்ளனர். பாபுகுமாரின் கேமரா காட்சிகள் அழகு.

என்னதான் படம் எடுத்து இருந்தாலும் ஜவ்வா இழுக்குது. செகண்ட் ஆஃப் வளவளன்னு இழுத்தடிக்குது. சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினிக்கு இடையில் நடக்கும் சில சுவாரசியமான விஷயங்கள் ரசிக்க வைக்கின்றன. பல காட்சிகள் நம்பகத்தன்மையாக இல்லை. அபத்தமாக இருந்தன.

அறிமுகம் இல்லாத நபர்கள் ‘எங்க பையன் உங்களுக்குத்தான்… எங்க பொண்ணு உங்களுக்குத்தான்…’ இப்படி எல்லாமா பேசுவார்கள். ஒரு காதலன் எதுக்காகவும் தன்னோட காதலியை விட்டுத்தரவே மாட்டான். அப்படி தந்தான்னா அது காதலே கிடையாது. 2கே கிட்ஸைக் கவர் பண்ணி இருந்தாலும் வளவள படமாகத் தான் இருக்கு.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment