Connect with us

Cinema News

விஜயை வச்சு இப்படி ஒரு ஐடியாவா? செமையாக இருக்குமே.. பண்ண முடியாத வருத்தத்தில் லோகேஷ்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். எடுத்தது 6 படங்கள் என்றாலும் அவருடைய சம்பளம் என்னமோ 50 கோடியை எட்டி விட்டது. அந்தளவுக்கு அடுத்தடுத்து ப்ளாக் பஸ்டர் படங்களை கொடுத்திருக்கிறார்.

இயக்குனராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் படங்களை தயாரித்து வருகிறார். தற்போது ரஜினி நடிப்பில் கூலி படத்தை எடுத்திருக்கிறார். அந்தப் படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது. முதன் முறையாக ரஜினி லோகேஷ் இணைந்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு அந்தப் படத்திற்கு இருந்து வருகிறது. பெரிய பெரிய மல்டி ஸ்டார்கள் கூலி படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

படத்தின் ரிலீஸ் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜயை பற்றி ஒரு பேட்டியில் லோகேஷ் பகிர்ந்திருக்கிறார். விஜயை வைத்து மாஸ்டர் லியோ என பெரிய பெரிய படங்களை கொடுத்திருக்கிறார். லியோ படத்தை பொறுத்தவரைக்கும் அந்தப் படத்தின் இரண்டாம் பாகமும் வரும் என்ற ஒரு பேச்சு அடிபட்டது. அதை பற்றி லோகேஷ் கூறும் போது இந்த மாதிரி ஒரு ஐடியாவை ஏற்கனவே விஜய் சாரிடம் பேசினேன்.

ஆனால் அது மாஸ்டர் 2 படத்திற்காகத்தான் பேசினேன். ஏனெனில் மாஸ்டர் படத்தில் விஜயின் கேரக்டர் ஒரு ஜாலியான கேரக்டராகவும் இருக்கும். அதனால் அது மக்களுக்கு பிடிக்கும் மாதிரியும் இருக்கும். ஆனால் அவர் இன்றைக்கு இருக்கிற இடம் அவருடைய ஐடியாலஜி வளர்ச்சி என வேற எங்கேயோ இருக்கிறது. மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என ஒரு பெரிய தளத்தை நோக்கி அவருடைய எண்ணம் இருக்கிறது.

master

master

அதனால் சினிமாவா அரசியலா என்று பார்க்கும் போது சினிமா என்பது வெறும் பொழுதுபோக்குதானே? மக்களுக்கு சேவை செய்வது என்பதுதான் முக்கியம். அதனால் மேலும் இதை பற்றி அவரிடம் பேசுவது என்பது முடியாது. ஆனால் எனக்கு என்னமோ ஆசை இருக்கிறது. என்னுடைய ஆசை தான் இது என லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார்.

Continue Reading

More in Cinema News

To Top