ஆகஸ்ட் முழுக்க ரஜினி ஃபீவர்தான்!.. ஃபேன்ஸ்க்கு செம ட்ரீட் இருக்கப்போகுது..

Published on: August 8, 2025
---Advertisement---

Coolie: தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். அபூர்வ ராகம் தொடங்கி கூலி வரை ரஜினி சினிமாவிற்கு வந்து 50 வருடங்கள் ஆகிவிட்டது. இன்னமும், அதாவது 74 வயதிலும் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்திய சினிமாவில் இந்த வயதில் ஹீரோவாக நடிப்பவர் ரஜினி மட்டுமே.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஏற்கனவே ஜெயிலர் எனும் சூப்பர் ஹிட் படத்தை ரஜினி கொடுத்தார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் கூலி திரைப்படமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகார்ஜுனா, அமீர்கான், சௌபின் சாஹிர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என பலரும் நடித்துள்ள கூலி ஒரு பேன் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது.

இந்த மாசம் முழுவதுமே ரசிகர்களுக்கு ரஜினி பீவராக இருக்கப் போகிறது. ஆகஸ்ட் 2ம் தேதியான நாளை படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவும், ஃப்ரி ரிலீஸ் விழாவும் நடக்கவுள்ளது. இந்த மேடையில் ரஜினி என்ன பேசப் போகிறார் என்கிற ஹைப் உருவாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ 10ம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.

ஆகஸ்ட் 14ம் தேதி கூலி படம் ரிலீஸ் ஆகிறது. ஆகஸ்ட் 15ம் தேதி ரஜினி சினிமாவிற்கு வந்து சரியாக 50 வருடங்கள் முடிவடைகிறது. இதையும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். இப்படி ஆகஸ்ட் முழுக்க ரஜினி ரசிகர்களுக்கு செம கொண்டாட்டமாக இருக்கப்போகிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment