எல்.ஐ.கே:
போடா போடி , நானும் ரௌடிதான் போன்ற படங்களை இயக்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இயக்குனர் விக்னேஷ் சிவன். இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் போதுமான வரவேற்பை கொடுத்தனர். இதில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தையும் இயக்கினார். அந்தப் படமும் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தப் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேலாகிறது .
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எந்த படங்களுமே வரவில்லை. துணிவு படத்திற்கு பிறகு அஜித்தை வைத்து விடாமுயற்சிக்கு முன் விக்னேஷ் சிவன் தான் எடுக்க இருந்தது. சில பல காரணங்களால் விக்னேஷ் சிவன் அந்த ப்ராஜக்ட்டில் இருந்து வெளியேற மகிழ் திருமேனி உள்ளே நுழைந்து படத்தை சொதப்பினார். அதன் பிறகுதான் பிரதீப் ரெங்க நாதனை வைத்து எல்.ஐ.கே படத்தை தொடங்கினார்.
இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.மேலும் இவர்களுடன் எஸ். ஜே.சூர்யா, சீமான் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோவும் ரவுடி பிக்சர்ஸும் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்புகள் மலேசியா, சிங்கப்பூர் என பல பகுதிகளில் நடைபெற்றன.

ஃபேண்டஸி காதல் கதைகளத்தில் உருவான இந்தப் படம் டிசம்பர் 18 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்கள். இப்படியிருக்கும் சூழ்நிலையில் படத்திற்கு ஒரு சின்ன பிரச்சினை எழுந்துள்ளது. அதாவது படத்தின் மொத்த ஓட்ட நேரம் 2 மணி 37 நிமிடமாம். ஆனால் லலித் அதை 2 மணி 15 நிமிடமாக மாற்ற சொல்லி வருகிறாராம்.
ஏனெனில் அப்பொழுதுதான் ஒரு நாளில் உள்ள 4 காட்சியை 5 காட்சிகளாக மாற்ற முடியும், பிசினஸிலும் எடுக்க முடியும் என்பதால் லலித் அவ்வாறு கூறி வருகிறாராம். ஆனால் விக்னேஷ் சிவனுக்கு இதில் கொஞ்சம் கூட உடன்பாடே இல்லையாம். அதனால் இன்னும் இது பற்றி முடிவு எடுக்கப்படாமலேயே இருக்கிறது.

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்
மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com


