அர்ஜூன்:
90கள் காலகட்டத்தில் ஒரு முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் அர்ஜுன். ஆக்சன் கிங் என்ற பெயரால் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் இவர் பெரும்பாலும் போலீஸ் கதாபாத்திரங்களிலேயே ஹீரோவாக நடித்திருக்கிறார். அது மட்டுமல்ல நாட்டுப்பற்றும் அதிகம் கொண்டவர். பெரும்பாலான படங்களில் நாட்டுக்காகவுக்கும் மக்களுக்காகவும் போராடுவது அவர்களுக்காக நன்மைகளை செய்வது என இப்படியான கதைகளம் கொண்ட படங்களிலேயே நடித்திருப்பார் அர்ஜுன்.
சமீபகாலமாக அவர் வில்லனாகவும் மாஸ் காட்டி வருகிறார். லியோ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருப்பார். அதேபோல அஜித் படத்திலும் வில்லனாக நடித்திருப்பார். ஏற்கனவே அஜித்துடன் மங்காத்தா திரைப்படத்தில் நடித்த அர்ஜுன் விடாமுயற்சி படத்தில் மெயின் வில்லனாக நடித்திருப்பார். நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் ஒரு சில படங்களை இயக்கியிருக்கிறார்.
இனிமேல் நடிக்க மாட்டேன்:
சமீபத்தில் கூட தன் மகளை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். நடிகர் தம்பி ராமையாவின் மகனை தான் இவரது மகள் காதலித்து திருமணம் செய்திருக்கிறார். குணச்சித்திர கேரக்டர்களிலும் நடித்து வரும் அர்ஜுன் அவ்வப்போது வில்லனாக தலைகாட்டி வருகிறார். இந்த நிலையில் இனிமேல் நான் வில்லனாக நடிப்பதாக இல்லை என்று சமீபத்திய ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் தான் நான் வில்லனாக நடித்த கடைசி திரைப்படமாக இருக்கும். அதன் பிறகு நான் வில்லனாக நடிக்க மாட்டேன் .அது என் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறி இருக்கிறார் அர்ஜுன்.என்னை வில்லனாக பார்க்க என்னுடைய ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. என்னை பாசிட்டிவாவே பார்த்துட்டு, ஒரு வில்லனா தெறிக்கனு எல்லாம் பேசுறது அவங்களுக்கு பிடிக்கவில்லை.
பாதிப்பு இருக்காது:
வில்லனா நடிச்சதுக்கெல்லாம் விருதுகள் கிடைக்கத்தான் செய்தது. ஆனாலும் என் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் இனி வில்லனா நான் நடிக்கிறதா இல்ல. எனினும் எத்தனையோ முன்னணி நடிகர்கள் வில்லனாக நடித்திருக்கிறார்கள். ஆனால் அர்ஜூன் வில்லன் கேரக்டர் அந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி எல்லாம் வில்லனாக மாஸ் காட்டியிருப்பார்கள். ஆனால் அர்ஜுன் அப்படி இல்லை.

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்
மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com
