Connect with us
ajith arm

latest news

முருகதாஸை உருவ கேலி செய்த அஜித்.. வெடித்த உச்சகட்ட மோதல்.. இதுவரை வெளிவராத தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். படங்களில் நடிப்பது அதன் பிறகு தன் குடும்பத்துடன் நேரத்தில் செலவிடுவது என இதைத்தான் அஜித் வழக்கமாக கொண்டு வருகிறார். தன்னுடைய படத்தின் ப்ரோமோஷன், திரைப்பட விழாக்கள், பொது விழாக்கள் என எங்கேயுமே அஜித்தை காண முடியாது. இப்படி இருந்தும் இவருக்கான ரசிகர் கூட்டம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இது வேறு எந்த நடிகருக்கும் கிடைக்காத ஒன்று.

எவ்வளவு பெரிய உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் தங்கள் படங்களின் பிரமோஷனில் கலந்து கொள்ளவில்லை என்றால் அதோடு அந்த படம் காணாமல் போய்விடும். ஆனால் அஜித், ’தன்னுடைய படத்திற்காக எந்த ப்ரோமோஷனும் தேவையில்லை. படம் நன்றாக இருந்தால் மக்கள் ரசிப்பார்கள். இல்லை என்றால் அது எனக்கு ஒரு தோல்வி படம்.’ என்று பழைய பேட்டி ஒன்றில் அவரே கூறியுள்ளார். இதனால் தான் அவரை தல என்று செல்லமாக அழைக்கிறார்கள்.

இந்த பெயர் வர முக்கிய காரணம் ஏ.ஆர். முருகதாஸ் தான். அஜித் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவான ’தீனா’ படம் இருவருக்குமே திரை துறையில் ஒரு திருப்புனையை கொடுத்தது. அடுத்தடுத்து இந்த வெற்றி கூட்டணி பல ஹிட் படங்களை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று வரை அது நடக்கவில்லை. இதற்கான காரணத்தை மூத்த பத்திரிக்கையாரும் சினிமா விமர்சகருமான வலைப்பேச்சு அந்தணன் கூறுகையில்.

”முருகதாஸை அஜித்துக்கு சுத்தமாக பிடிக்காது. அதற்குக் காரணம் ’கஜினி’ படத்தை சூர்யாவுக்கு செய்ததுதான். அஜித் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, நாம இந்த படத்தை பண்ணலாம் என்று ஏ ஆர் முருகதாஸிடம் சொல்லி இருக்கிறார். அவர் கேட்காமல் சூர்யாவிடம் சென்று கஜினி படத்தை எடுத்துள்ளார். இது அவருக்கு பெரிய வருத்தமாக இருந்தது. அதன் பிறகு நீண்ட நாட்கள் கழித்து அஜித் முருகதாஸ் கூட்டணியில் ஒரு படம் உருவாக இருந்தது. அதற்கும் முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் முன்வந்தார்”.

”அந்தப் படத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. அதன் பிறகு தயாரிப்பாளர் அஜித்திடம் பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது அஜித் ஏ.ஆர்.முருகதாஸுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். தயாரிப்பாளர். ’ஒரு கோடி கொடுக்கிறேன்’ என்று சொல்லி இருக்கிறார். உடனே அஜித் ஒரு கோடியை அடுக்குங்க பக்கத்துல ஏ.ஆர்.முருகதாஸை நிக்க வைங்க எது உயரமா இருக்குனு பாருங்க. அப்படின்னு சொல்லிட்டு சிரிச்சிருக்கார். அவ்வளவு சம்பளம் ஏன் அவருக்கு கொடுக்குறீங்க. அப்படின்னு அஜித் கேட்டுள்ளார்”.

”அதன் பிறகு நான் அடைவில் அந்த ப்ராஜெக்ட் கைவிடப்பட்டது. இதனால் அந்த வருத்தம் எப்போதும் ஏ.ஆர்.முருகதாஸுக்கு இருக்கும். அதனால் எதிர்காலத்தில் கூட இனி அஜித்துடன் படம் பண்ணுவது மிகப் பெரிய சந்தேகம்தான். ஆனால் சினிமாவில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். இருந்தாலும் அதற்கு வாய்ப்பில்லை என்று தான் எனக்கு தோன்றுகிறது.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Continue Reading

More in latest news

To Top