Connect with us
surya loki

Cinema News

இந்த தடவை மிஸ் ஆகாது.. சூர்யாவை தூக்கி விடும் லோகேஷ்.. சம்பவம் லோடிங்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. படத்திற்கு படம் தன்னை வருத்தி முழுவதுமாக அர்ப்பணித்து நடிக்கக்கூடிய நடிகர்களில் சூர்யாவும் ஒருவர். தமிழ் சினிமாவில் கமல்ஹாசனுக்கு பிறகு நடிப்பு அரக்கன் என்றால் அது இவர்தான். ஒரு காலத்தில் தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைந்தார். தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து தனக்கான இடத்தை தக்க வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர் தோல்வி படங்களை கொடுத்து தற்போது இரண்டாம் நிலை நடிகராக இருக்கிறார்.

என்னதான் கடின உழைப்பு போட்டு நடித்தாலும் அது ரசிகர்களிடம் எடுபடவில்லை.‌ சூர்யா ஒரு ஹிட் படத்தைக் கொடுத்து சுமார் பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. விமர்சன ரீதியாகவும் வணிகரீதியாகவும் தற்பொழுது சூர்யாவுக்கு ஒரு படம் தேவைப்படுகிறது. கடைசியாக வெளிவந்த ரெட்ரோ திரைப்படம் ஓரளவுக்கு சுமாரான வெற்றியை பதிவு செய்திருந்தது. அடுத்ததாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ”கருப்பு” என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

இந்த படம் சூர்யா மீது இருந்த பழைய ரெக்கார்டுகளை தூக்கி எறிந்து சூர்யாவை புதிய வெற்றி பாதையில் அழைத்து செல்ல வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது. இந்நிலையில் லோகேஷ் கூலி படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக கார்த்தியை வைத்து கைதி-2 படத்தை இயக்க உள்ளார். இது எல்சியு கதை அம்சத்தில் வருவதால் விக்ரம் படத்தில் கடைசி இரண்டு நிமிடம் வந்து ஒட்டு மொத்த படத்தையும் தூக்கி நிறுத்திய ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா மிரட்டி இருப்பார்.

தற்போது ரோலக்ஸை கைதி-2 வில் பயன்படுத்தப் போவதாக லோகேஷ் அறிவித்துள்ளார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில்,” தனது பெரிய பட்ஜெட் படமாக கார்த்தியை வைத்து கைதி-2 படத்தை இயக்க உள்ளேன். இதில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் எல்சியு மூலம் மீண்டும் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்”. என்று கூறியுள்ளார். விக்ரம் படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்தக் கதாபாத்திரத்துக்கு என்று தனியாக படம் செய்ய வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருந்தது. கூடிய விரைவில் அதற்கான வேலையும் நடைபெறும் என்று லோகேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதனை அடுத்து வெற்றி மாறன் கூட்டணியில் நீண்ட காலமாக உருவாகாமல் இருந்த வாடிவாசல் திரைப்படமும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
SATHISH G
சதீஷ் பி.இ. பட்டதாரியான இவர் 3 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 2 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top