Vijay:
சினிமாவில் தன்னுடைய முழு ஆதிக்கத்தையும் செலுத்திய விஜய் அடுத்து அரசியலில் அடியெடுத்து வைத்தார். அவர் கட்சித் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆன நிலையில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்ள இருக்கிறார். அதற்கான தேர்தல் பிரச்சாரத்தில்தான் விஜய் ஈடுபட்டு வந்தார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று தன்னுடைய தேர்தல் பரப்புரையை நடத்தினார்.
முதற்கட்டமாக பெரிய அளவில் மாநாட்டை நடத்தி அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களையும் வாய்பிளக்க வைத்தார். இருந்தாலும் திரையில் முன்னணி ஹீரோவாக இருக்கும் ஒருவர் அதுவும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் விரும்பப்படு ஒருவர் வந்தால் அவரை பார்க்க கூட்டம் வரத்தான் செய்யும் என பல அரசியல் தலைவர்கள் விமர்சித்தனர்.
கூட்டமெல்லாம் ஓட்டா மாறுமா?
இந்த கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறும் என விஜய் நினைக்கக் கூடாது என்றும் அறிவுரை வழங்கினார்கள் .ஆனாலும் அதையெல்லாம் விஜய் காதில் வாங்கவே இல்லை. அடுத்த மாநாட்டை மதுரையில் நடத்தில் மேலும் அனைவரையும் ஜெர்க் ஆக்கினார். திருச்சியில் தனது முதல் தேர்தல் பரப்புரையை தொடங்கிய விஜய் ஒவ்வொரு சனிக்கிழமையில் தனது பரப்புரையை திட்டமிட்டிருந்தார்.
கடைசியில் கரூரில் நடந்த பரப்புரையில் ஏராளமானவர்கள் கூட அந்த கூட்ட நெரிசலில் சிக்கி பல பேர் காயமடைந்தனர். 41 பேர் உயிரிழந்தனர். இது விஜய்க்கு பெரும் நெருக்கடியை தந்தது. இன்று வரை விஜய் வெளியே வரவில்லை. மீடியாக்களை சந்திக்கவும் இல்லை. கரூரில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் விஜயின் தந்தை எஸ்.ஏ.சி பேசிய ஒரு வீடியோ இப்போது வைரலாகி வருகின்றது.
தனதாக்கிக் கொண்ட புஸ்ஸி:
நான்கு வருடங்களுக்கு முன்பாகவே பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என பேசியிருக்கிறார். அதாவது விஜயை பொறுத்தவரைக்கும் அவர் மீடியாக்களை சந்திக்க மாட்டார். யாரையும் சந்திக்க மாட்டார். அடுத்தடுத்து அறிக்கைகளையும் விட மாட்டார். இதெல்லாம் அவருடைய நேச்சர். இதை பயன்படுத்தி சில பேர் என்ன செய்தார்கள் என்றால், நானே புஸ்ஸீ ஆனந்த் என்ற ஒருத்தரை மாநில பொறுப்பாளர் என்ற அடிப்படையில் ஒரு போஸ்ட் கொடுக்கிறேன். அவர் ஏற்கனவே ஒருமுறை பாண்டிச்சேரியில் எம்எல்ஏவாக இருந்தவர். அடுத்த தேர்தலில் 5000 ஓட்டுக்கள் கூட அவர் வாங்கவில்லை.
அங்கு தான் நான் தவறு செய்து விட்டேன். ஒரு அரசியல்வாதியை இவருடன் சேர்த்து விட்டேன். அவர் அரசியல்வாதியாகவே யோசிக்க ஆரம்பித்து விட்டார். இன்னைக்கு இருக்கிற டெக்னாலஜியை எப்படி பயன்படுத்தலாம் என நினைத்து இருங்க ஒவ்வொன்றாக சொல்கிறேன். மொத்தம் 37 மாவட்டம். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என்று பார்த்தாலும் 37 தலைவர்கள் தான் இருக்க வேண்டும். அதோடு இளைஞரணி தலைவர்கள் என்று வைத்தாலும் கூட ஒரு 70 பேர் இருப்பார்கள். ஆனால் 200 மாவட்ட தலைவர்கள் இருக்கிறார்கள். இது எப்படி சாத்தியமாகும். இதுதான் முதல் கேள்வி.
விஜயை சுற்றி வேலி:
இந்த 200 பேரில் 70 பேர் போக மீதம் 130 பேர் இருக்கிறார்கள். இந்த 130 பேரையும் புஸ்ஸி ஆனந்த் புதுசாக போடுகிறார். புதுசா போஸ்ட் தருகிறார். உடனே விஜயுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வைக்கிறார் . போஸ்ட்டும் கொடுத்தாச்சு. விஜயையும் சந்திக்க வச்சாச்சு. அதனால் நான் சொல்வதை எல்லாம் நீ செய்ய வேண்டும் என்ற ஒரு கட்டமைப்பை அவர் உருவாக்கி விடுகிறார். இப்படியே ஒரு குரூப்பை உருவாக்கி ஒரு ஆன்லைன் குரூப்பாக அதாவது ட்விட்டர் மாதிரியான ஒரு குரூப்பை உருவாக்கி கொள்கிறார். அந்த குரூப்பில் விஜயும் இருக்கிறார். விஜய்க்கு வெளியில் நடப்பது எதுவுமே தெரியாத வகையில் ஒரு இரும்பு கூண்டுக்குள் அவரை போய் வைத்து விட்டார்கள்.
இந்த குரூப்பில் என்ன செய்கிறார்கள் என்றால் காலையில் ஒரு செய்தியை உருவாக்குகிறார்கள் .உதாரணமாக என்னை எடுத்துக் கொள்ளுங்கள் .அப்பா நேற்று இந்த இடத்தில் இதை தவறாக பேசி விட்டார். உங்களை டேமேஜ் செய்து விட்டார் என ஒரு போஸ்ட்டை போட வைக்கிறார்கள். அந்த குரூப்பில் நூறு பேர் இருக்கும் பட்சத்தில் அந்த 100 பேரும் இந்த செய்தியை பார்க்கிறார்கள். அவர்களுக்குள் ஷேர் செய்கிறார்கள். அது அப்படியே வெளியில் பரவுகிறது. இது ஒரு தவறான விஷயம். இது நடந்திருக்காது. இதை விஜய் பார்க்கிறார். ஒரு பொய் 10 தடவை சொன்னாலே அது உண்மையாகிவிடும். இது 100 முறை பகிரப்படுகிறது.
பொய்யை நம்பும் விஜய்:
அதனால் அங்கு ஒரு பொய் உண்மையாக பார்க்கப்படுகிறது. உண்மை விஜயைப் போய் சேர்வதில்லை. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக விஜயின் உண்மையான விசுவாசிகளை சேர்க்காமல் புஸ்ஸி ஆனந்த் அரசியல்வாதியாக இருப்பதனால் தனக்கு ஒரு விசுவாசிகளை சேர்த்துக்கொண்டே போகிறார். உண்மையான ஒரு அரசியல் கட்சிக்குள் நடக்கிற ஒரு விஷயத்தை இந்த அமைப்புக்குள் செய்து கொண்டிருக்கிறார்கள். இது எனக்கே சமீபத்தில் தான் தெரியும்.
தன்னுடைய விசுவாசிகளை புஸ்ஸி ஆனந்த் வளர்த்துக் கொண்டிருக்கிறார். தான் சொல்வதை கேட்பதற்காக ஒரு குரூப்பை வளர்த்துக் கொண்டிருக்கிறான் .நாளை இது ஒரு பெரிய இயக்கமாக வளரும்போது எவ்வளவு பெரிய பாதிப்பு வரும் தெரியுமா என அந்த வீடியோவில் எஸ்ஏசி பேசி இருக்கிறார். சமீபத்தில் நடந்த கரூர் சம்பவத்தையும் இந்த வீடியோவையும் ஒப்பிட்டு இந்த ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது.
