
Cinema News
ரஜினி சாருடன் மூணு முறை மிஸ் ஆயிடுச்சு.. அது மட்டும் நடந்திருந்தா?.. ஃபீலிங்கில் லிங்குசாமி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினி. எந்த ஒரு இயக்குனருக்கும் ரஜினியுடன் ஒரு தடவையாவது படம் பண்ணி விட வேண்டும் என்று ஆசை இருக்கும். அப்படி தனக்கு வந்த மூன்று வாய்ப்பையும் நழுவ விட்டதாக வருத்தத்தோடு கூறியிருக்கிறார் இயக்குனர் லிங்குசாமி மேலும் அவர் கூறியதாவது ,” நான் முதல் முறையாக ரஜினி சாரை சந்தித்தது ரன் படத்தில் எடிட்டிங் போதுதான் அப்பொழுது பக்கத்து ஸ்டுடியோவில் பாபா படத்தின் எடிட்டிங் போய்க்கொண்டிருக்கும்”.
”அப்பொழுதுதான் அவரைப் பார்த்தேன். அவர் பேசும்போது எனக்கு ஏதோ மாயாஜால உலகத்தில் இருப்பது போல் இருந்தது. ரன் படத்திற்கு வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அதுதான் நான் அவரை முதல் முதலாக சந்தித்த அனுப்பவம். ரஜினி சாரை பற்றி சொல்ல வேண்டுமென்றால் அவர் இன்றைக்கும் டைரக்டர் ஆர்டிஸ்ட் தான். அவர் ஒரு சிறந்த ஆர்ட்டிஸ்ட் என்பதை சத்யராஜ் சார் கூலி ஆடியோ லான்ச்சில் சொல்லி இருப்பார். பெஸ்ட் ஆர்ட்டிஸ்ட் ஆக இருக்கக்கூடிய ஒரு ஹீரோ தான் கமர்சியல் ஹீரோவாக மாறி இருக்காரு”.

”உலகத்துல இருக்கிற எல்லா ஹீரோக்களிலும் யாருடன் ஒப்பிட்டாலும் ஒரு சிலருக்கு தான் க்ரீன் ப்ரெசென்ஸ் நன்றாக இருக்கும். அதில் முதன்மையானவர் தான் ரஜினி. திரையில் 100 சதவீதம் அந்த மேஜிக்கை கொடுக்கக்கூடிய ஒரே நபர் ரஜினி சார் மட்டும்தான். என்றும் தான் நடித்த காட்சிகளில் இன்னும் எவ்வளவு இம்ப்ரூவ்மெண்ட் பண்ணலாம் என்று சிந்தித்துக் கொண்டே இருப்பார். அதனாலே என்னவோ இத்தனை வருஷமாக நம்பர் இடத்திலே இருக்கிறார். எனக்கு அவருடைய நடிப்பில் மிகவும் பிடித்த திரைப்படம் முள்ளும் மலரும். அவ்வளவு அற்புதமான நடித்திருப்பார்”.
”அதேபோல பாட்ஷா எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது. எனக்கு ரஜினி சாருடன் படம் பண்ண வேண்டும் என்று ஒரு மூன்று காலகட்டத்தில் மூன்று சிட்டிங் போயிருக்கு. முதலில் ரன் படம் முடித்த பிறகு இரண்டு மூன்று தடவை ரஜினி சார் வீட்டுக்கு போய் கதை சொன்னேன். அதுக்கப்புறம் சில வருடங்கள் கழித்து ஒரு முறை. சமீபத்தில் கூட ஒரு முறை அவரை சந்தித்தேன் இப்படி மூன்று முறை அவருடன் மிஸ் ஆகிவிட்டது. அதற்குக் காரணம் அவருக்கான கதை என்னிடம் சரியாக மாட்டவில்லை”.
‘மற்றொன்று நான் ரஜினியின் தீவிர ரசிகன் அவருக்கு என்னதான் யோசித்தாலும் அது எனக்கு திருப்திகரமாக இல்லை. இருந்தாலும் அவருடைய படங்கள் வெளியாகும் அன்று நான் ஒரு இயக்குனராக இருக்க மாட்டேன். சிறு வயதில் எப்படி ரஜினி ரசிகனாக இருந்தேனோ அப்படி முதல் நாள் முதல் காட்சி எப்படியாவது பார்த்து விடுவேன். 50 வருடமாக சினிமாவில் சாதித்தது என்பது மிகப்பெரிய விஷயம். நிச்சயமாக அவர் ஒரு தெய்வக் குழந்தைதான். உண்மையிலேயே அவர் ஒரு அதிசயம் தான்”. என்று கூறியுள்ளார்.