
Cinema News
Vijay: சூர்யா யானை மேல சவாரி! கிண்டலடித்த விஜய்.. லீக் பண்ணிட்டாரே ஏ.ஆர்.முருகதாஸ்!..
Vijay: சமீபகாலமாக ஏஆர் முருகதாஸின் பேட்டி சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன. ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியிருக்கும் திரைப்படம் மதராஸி. இந்தப் படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது. படத்தின் புரோமோஷனும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அது சம்பந்தமாக ஏஆர் முருகதாஸும் பல விஷயங்களை பேட்டிகளில் கூறி வருகிறார்.
ஏஆர் முருகதாஸ் தமிழில் வெற்றி கொடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அவரது இயக்கத்தில் துப்பாக்கி சூப்பர் ஹிட்டானது. அதன் பிறகு தர்பார் படம் பெரிய விமர்சனத்தை சந்தித்தது. அந்தப் படத்திற்கு பிறகு மகேஷ் பாபுவை வைத்து ஒரு படத்தை எடுத்தார். அந்த படமும் விமர்சன ரீதியாக மோசமான வரவேற்பையே பெற்றது. இப்படி தொடர்ந்து தோல்விப்படங்களையே கொடுத்து வந்த ஏஆர் முருகதாஸை நம்பி சிவகார்த்திகேயன் கால்ஷீட் கொடுத்தார்.
ஏற்கனவே சிவகார்த்திகேயனை வைத்து மான்கராத்தே படத்தை தயாரித்தார் ஏஆர் முருகதாஸ். இப்போது மதராஸி படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படம் ஒரு வரலாற்று பின்னணியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாக இருக்குமோ என்று அனைவரும் கேட்டு வந்தனர். ஏனெனில் அதன் தலைப்பு அப்படிப்பட்டவையாக இருந்தன.
ஆனால் காதல் பின்னணியில் ஆக்ஷன் கலந்த படமாகத்தான் மதராஸி இருக்கும். கஜினி படம் மாதிரியான ஒரு கதை என அண்மையில் அளித்த பேட்டியில் முருகதாஸ் கூறியிருக்கிறார். இந்த நிலையில் சூர்யாவை வைத்து ஏழாம் அறிவு படத்தை எடுத்தார் முருகதாஸ். அந்தப் படத்தில் ஒரு காட்சியில் சூர்யா யானை மீது அமர்ந்து சவாரி செய்வது போல் காட்சி இருக்கும்.

அதை அடையாறு பிரிட்ஜில்தான் எடுத்தாராம் முருகதாஸ். அந்த சமயத்தில் முருகதாஸிடம் விஜய் ‘அடையாறு பிரிட்ஜில் அதுவும் யானை மீது சவாரியா? இது கொஞ்சம் ஓவரா இல்ல?’ என கிண்டலாக கேட்டாராம் விஜய். இதை ஒரு பேட்டியில் முருகதாஸ் கூறியிருக்கிறார்.