Connect with us
siva 1

Cinema News

Sivakarthikeyan: அடுத்த விஜய்னு சொல்றத விட இப்படி சொல்லலாம்! SK குறித்து முருகதாஸ் சொன்ன விஷயம்

Sivakarthikeyan: சிவகார்த்திகேயனை பொறுத்தவரைக்கும் நம் பக்கத்து வீட்டு பையன் மாதிரியான இமேஜை கொண்டவர். அதுமட்டுமில்லாமல் அவருக்கு சிறப்பே அவருடைய ஹியூமர்தான். அப்படிப்பட்ட ஒருவரை ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றுவது என்பது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனாலும் இன்று விஜய் அஜித் இவர்களுக்கு அடுத்த படியான ஒரு இடத்தில் அதுவும் மாஸ் ஆக்‌ஷன் ஹீரோவாக வளர்ந்து நிற்கிறார் சிவகார்த்திகேயன்.

குறிப்பாக அமரன் படத்தில் நடித்தது 10 நேஷனல் அவார்டு வாங்கியதற்கு சமம். அந்தப் படத்திற்கு பிறகு அவருடைய ரேஞ்சே மாறிப் போய்விட்டது.அனைவரும் அவரை காதலிக்க தொடங்கினார்கள். அந்தப் படத்தில் ஒரு மிலிட்டரி மேனாக வாழ்ந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். சாய்பல்லவியுடனான காதல் ரொமாண்டிக் என எல்லார் மனதிலும் குடி போனார் சிவகார்த்திகேயன்.

அந்தப் படத்திற்கு பிறகு கோட் படத்தில் கடைசி ஒரு காட்சியில் சிறப்பு தோற்றத்தில் வந்திருப்பார். அதுவும் கையில் வைத்திருந்த துப்பாக்கியை விஜய் கொடுத்து இனிமேல் நீங்கதான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது போல் அந்த காட்சி உணர்த்தப்பட்டிருக்கும். அதிலிருந்தே அடுத்த விஜய் சிவகார்த்திகேயனா என்ற ஒரு கேள்வி அனைவர் மத்தியிலும் இருந்து வந்தது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக முருகதாஸ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அடிப்படையில் சிவகார்த்திகேயன் ஒரு நல்ல பெர்ஃபார்மர். நல்லா நடிப்பார். ஒரு ஆக்‌ஷன் ஹீரோ ஹியூமர் பண்றது கஷ்டம். ஆக்‌ஷன் ஹீரோவாக எளிதாக மக்களிடம் ரீச் ஆயிடலாம். ஆனால் ஹியூமர் பண்றதுதான் கஷ்டம். அது அடிப்படையிலேயே இருக்கணும். ரஜினி சார், விஜய் சார், சிவகார்த்திகேயன் என ஹீயூமர் செய்து ஆடியன்ஸை ரீச் ஆகும் போது ஆக்‌ஷன் ஹீரோவாகவும் அவர்களால் மக்களை எளிதாக சென்றடைய முடியும்.

மேலும் மதராஸி ஸ்கிரிப்ட் எழுதும் போதே விஜய் அரசியலுக்கு போவார் என்று நினைக்கவே இல்லை. பொதுவாகவே நான் ஒரு ஹீரோவை அடுத்தகட்டத்துக்கு கொண்டு போக வேண்டும். நாமும் அடுத்த லெவலுக்கு போகணும். பார்க்கிற ஆடியன்ஸும் சந்தோஷப்படணும். அப்படித்தான் மைண்ட்ல வச்சுக்கிட்டு ஸ்கிரிப்ட் பண்ணேன். இந்த இடம் அந்த இடம்னு இல்ல.

என்னை பொறுத்தவரைக்கும் ஒருத்தர் மாதிரி இன்னொருத்தர் வரணும்னு அவசியமே இல்லை. எம்ஜிஆரின் இமேஜே வேற லெவல். அவர் ரூட்ல வரும் போது எம்ஜிஆர் சாருக்கும் ரஜினி சாருக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. எம்ஜிஆரின் கலர், ரஜினியின் பாடி லேங்குவேஜ் எந்த சம்பந்தமும் இருக்காது. எம்ஜிஆரின் படங்களில் சிகரெட்டோ எதுவுமோ இருக்காது. ஆனால் ரஜினி சார் நாட்டுக்கொரு நல்லவன்னு இருப்பாரு. இந்த கையில் சிகரெட், அந்த கையில் பாட்டில்னு நல்லவரா இருப்பாரு.

அப்படியே பீரியட் மாறிடுச்சு. எம்ஜிஆரை ஃபாலோ செய்தவர்கள் எல்லாம் எம்ஜிஆரின் வாரிசாக மாறவில்லை. அப்படியே உல்ட்டாவா பண்ணும் போதுதான் உயர முடிந்தது. அதே மாதிரி விஜய் ஆரம்பத்தில் ரஜினி சார் மாதிரி ஓப்பனிங் சாங் ஆக்‌ஷன் என பண்ணிக் கொண்டிருந்தாலும் அவருக்கு என தனி பாணியை வைத்துக் கொண்டார். சிவகார்த்திகேயனும் அப்படித்தான். இவங்க மூணு பேருக்குமே ஒரு சிமிலாரிட்டி இருக்கும்னு நான் சொல்லல. அப்படி சொல்லணும்னா குழந்தைங்க ஃபேன்ஸ் இந்த மூணு பேருக்குமே அதிகம். அதுதான் இவங்க மூணு பேருக்கும் உள்ள ஒற்றுமை. அதுதான் என முருகதாஸ் கூறினார்.

Continue Reading

More in Cinema News

To Top