நகக்க்ஷதங்கள் என்ற மலையாள சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகை மோனிஷா உன்னி. அப்போது வயது அவருக்கு 17. முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்றார். முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்த அவரது இரண்டாவது படமான பெருந்தச்சன் படமும் சூப்பர் ஹிட். அந்த படத்தில் தான் நடிகர் பிரசாந்த் மலையாளத்தில் அறிமுகம் ஆனார்.
மலையாளத்தை தொடர்ந்து தமிழில் அவர் அறிமுகம் ஆன படம் பூக்கள் விடும் தூது. இப்படத்திற்கு திரைக்கதை மற்றும் இசையினை டி.ராஜேந்தர் செய்தார். பாடல்கள் செம ஹிட அடித்தது. ஆனால் படம் சுமாரன வெற்றியையே பெற்றது. இரண்டாவதாக கார்த்திக் உடன் உன்ன நினச்சேன் பாட்டு படிச்சேன் படத்தில் நடித்தார். இந்த படம்தான் அவரை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்றது. அதிலும் குறிப்பாக அதில் இடம் பெற்ற என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி, எனக்குச் சொல்லடி, விஷயம் என்னடி பாடல் இன்றளவிலும் அனைவராலும் கேட்டு கொண்டாடப்படுகிறது.

தமிழில் முன்னனி நட்சத்திரமாக வருவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட அவர் விபத்தில் அகால மரணம் அடைந்தது அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பை முடித்து கொச்சிக்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மோனிஷாவின் தாயார் மட்டுமே உயிர் பிழைத்தார்.
திரையுலகில் ஒரு மிகப்பெரிய இடத்தை பிடிப்பார் என்று அன்று கணிக்கப்பட்ட மோனிஷா தனது 21 வயதிலேயே உயிரிழந்தார். இவர் இறந்த பின்பு சரத்குமாருடன் இவர் நடித்திருந்த மூன்றாவது கண் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
