விஜயகாந்தை வைத்து ஆர்.கே.செல்வமணி புலன் விசாரணை திரைப்படத்தை இயக்கிய போது அது அவரின் முதல் திரைப்படம். எனவே இயக்குனர் மீது நம்பிக்கை இல்லாமல்தான் அப்படத்தை தயாரித்த இப்ராஹிம் ராவுத்தர் இருந்தார். ஆனால் ஒரு இயக்குனர் செல்வதை கேட்டு நடிப்பது விஜயகாந்தின் பழக்கம் என்பதால் அவர் எதிலும் தலையிடவில்லை. ஒருபக்கம் சொன்ன பட்ஜெட்டை தாண்டி படம் சென்றுவிட்டது.
எனவே செல்வமணியை அழைத்து ‘நீ இனிமேல் நான் ஆபீசுக்கு வராதே’ என்று திட்டி அனுப்பிவிட்டர் ராவுத்தர். ஒருபக்கம் ஏற்கனவே எடுத்த விஜயகாந்த் படங்களில் வந்த நஷ்டம் மற்றும் இந்த படம் பாதியில் நின்றது போன்ற காரணங்களால் ராவுத்தரின் உடல்நலம் பாதிக்கப்பட்டது.
செல்வமணியை விரட்டியதால்தான் தனக்கு இந்த பிரச்சனை என யோசித்த ராவுத்தர் செல்வமணியை மீண்டும் அழைத்து பேச மீண்டும் ஷூட்டிங் துவங்கியது. செல்வமணி சில விஷயங்களில் அடம்பிடித்தார். கவர்னர் வரும் காட்சியில் பென்ஸ் கார்தான் வேண்டுமென்று கேட்டார். ராவுத்தர் கொடுக்க முடியாது என சொல்ல ‘கார் இல்லையென்றால் பேக்கப்’ என செல்வமணி சொல்ல பிரச்சனை துவங்கியது.

செல்வமணி விவகாரம் விஜயகாந்த் ராவுத்தருக்கும் இடையே கூட மோதலை உருவாக்கியது. ஒரு கட்டத்தில் மணிவண்ணனை வைத்து படத்தை முடித்து விடலாம் என்று கூட யோசித்துள்ளனர். ஆனால் ஒருவனின் வயிற்றில் அடித்து நான் வாழ மாட்டேன் என்று மணிவண்ணன் சொல்லிவிட மீண்டும் செல்வமணியை அழைத்து படத்தை இயக்க சொன்னார்கள்.
ஒரு பக்கம் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணியே ஆகணும் என்ன ராவுத்தர் சொல்ல அதுக்கு செல்வமணி சரியான பதிலை சொல்லாததும் ராவுத்தருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டார். அப்படி வெளியான புலன் விசாரணை படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள். படமும் ஹிட் அடித்தது. ‘இதுதான் என் கல்யாண பரிசு’ என்று சொன்னார் விஜயகாந்த். செல்வமணியை அழைத்டு விஜயகாந்தின் 100வது படத்தை இயக்கும் வாய்ப்பை அவருக்கே கொடுத்தார் ராவுத்தார். அப்படி வெளிவந்த திரைப்படம்தான் கேப்டன் பிரபாகரன்.
