விஜய் நடித்து முடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் 2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகவிருக்கிறது. இது விஜயின் கடைசி படமாக பார்க்கப்படுவதால் இந்த படத்தை பார்க்க விஜய் ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இந்த படத்தின் ஷூட்டிங் எப்போதோ முடிந்த மற்ற வேலைகள் நடந்து வந்தது. தற்போது படம் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது.
ஜனவரி 9ம் தேதி ஜனநாயகன் படமும், ஜனவரி 14ம் தேதி சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் வெளியாகும் என சொல்லப்பட்டது. எனவே 5 நாட்கள் எல்லா தியேட்டர்களிலும் ஜனநாயகன் படம் ஓடும்போது அது வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு ஜனவரி 10ம் தேதியே படம் வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இதனால் ஜனநாயகன் படத்திற்கு கிடைக்கும் தியேட்டர்கள் குறையும் நிலை உருவாகியிருக்கிறது. ஏனெனில் ஒரு தியேட்டரில் இரண்டு காட்சி ஜனநாயகனும் இரண்டு காட்சி பராசத்தை படத்தையும் திரையிடும் நிலை உருவாகி இருக்கிறது. எனவே ஒரு வாரத்தில் ஜனநாயகன் செய்யும் வசூலுக்கு இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டும் என்கிற நிலை உருவாகியிருக்கிறது.
இந்நிலையில்தான் ஆந்திராவில் ஜனநாயகன் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. எப்படியெனில் அதே ஜனவரி 9ம் தேதி ஆந்திராவில் பிரபாஸின் ராஜா சாப் உள்ளிட்ட சில முக்கிய படங்கள் வெளியாகிறது. எனது ஜனநாயகனுக்கு அதிக தியேட்டர்கள் கிடைக்காது. எனவே ஆந்திராவில் மட்டும் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கலாமா என்று தயாரிப்பு நிறுவனம் யோசித்து வருகிறதாம். ஜனநாயகன் படம் தொடர்ந்து சிக்கல்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
