Vijay SK: விஜய் சார் கூட போட்டி போடுற எண்ணமே இல்ல! வசமா சிக்கிய சிவகார்த்திகேயன்

Published on: December 24, 2025
siva (3)
---Advertisement---

விஜய் ரஜினி போட்டி போய் இப்போது விஜய் சிவகார்த்திகேயன் போட்டிதான் நடந்து வருகிறது. கோட் படத்தில் எப்போது விஜய் துப்பாக்கிய புடிங்க சிவானு சொன்னாரோ அப்போது இருந்தே விஜய்க்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே கடும் போட்டி ஆரம்பமானது. ஆனால் கோட் படத்தில் அப்படி ஒரு காட்சியை அனுமதித்ததற்கு விஜய் சாருக்குத்தான் தங்க்ஸ் சொல்லணும் என்றெல்லாம் சிவகார்த்திகேயன் பேசியிருந்தார்.

இப்போது ஜன நாயகன் படத்தோடு சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படமும் வெளியாவதால் ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் சிவகார்த்திகேயனுக்கு எதிராக திரும்பியிருக்கின்றனர். துப்பாக்கிய நம்பி கொடுத்தவரையே எதிர்த்து நிக்குறீயானு சமூக வலைதளங்களில் சிவகார்த்திகேயனை ஒருமையில் திட்டி வருகின்றனர். ஆனால் இதற்கும் சிவகார்த்திகேயனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றுதான் திரையுலகில் கூறுகின்றனர்.

ஏனெனில் படத்தை எப்போது ரிலீஸ் செய்ய வேண்டும்? எந்த தேதியில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பது ஹீரோவின் கையில் இல்லை. அது தயாரிப்பாளரின் கையில்தான் இருக்கிறது. இதில் எப்படி சிவகார்த்திகேயன் காரணமாக இருப்பார் என்றுதான் அனைவரின் கருத்தாக இருக்கிறது. இருந்தாலும் இன்று தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திரமாக மாறியிருக்கும் சிவகார்த்திகேயன் ஒரு நன்றிக்கடனுக்காவது விஜய் சாரோடு நாம் வர வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் ஒரு பழைய பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதாவது நான் இப்போது தான் வளர்ந்து வரும் நடிகர். விஜய் சாரோடெல்லாம் போட்டி போடுவது என்பது முடியாத விஷயம். அது நல்லாவும் இருக்காது. அப்படி ஒரு எண்ணமும் கிடையாது. அவங்களாம் பெரிய ஸ்டார்ஸ். என்னை பொறுத்தவரைக்கும் என்னுடைய படங்களுக்கு நல்ல ஒரு டேட், நல்ல விடுமுறை நாள் வந்தால் நன்றாக இருக்கும் என்பது மட்டும்தான்.

அதனால் இதை ப்ராக்டிக்கலா பண்ணவே முடியாது. அப்படி படங்களுக்கான தேதி மாறும் போது இப்படியான போட்டிகளுக்கு வாய்ப்பிருக்கிறது. இதுதான் தயாரிப்பாளரின் call. ஆனால் இதை ஒரு சிலர் தப்பா , நான் எல்லாருடனும் போட்டி போடுறேனு சொல்லிக்கிட்டு இருக்காங்க. எனக்கு போட்டி போடுற ஐடியாவே இல்லை. அவங்களோட போட்டி போடுற் தகுதியும் தைரியமும் எனக்கு இல்லைனு அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஆனால் இந்த வீடியோவை பார்த்த பலரும் அப்போ இப்போது உங்களுக்கு அந்த தைரியம் வந்துருச்சா பங்கு என சிவகார்த்திகேயனை விளாசி வருகின்றனர்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.