எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் ஜனநாயகன். இந்தப் படம் பொங்கல் ரிலீஸாக ஜனவரி 9 ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது. படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மலேசியாவில் கோலாகலமாக நடைபெற்றது. அந்த விழாவிற்கு உலகெங்கிலும் உள்ள தமிழ் ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் எதிர்பார்ப்பையும் மீறி அந்த விழா பெரும் ஹைப்பை ஏற்றியது. விழாவிற்கு விஜயின் பெற்றோர், பிரபுதேவா, விஜயுடன் இதுவரை பயணித்த டான்ஸ் மாஸ்டர்கள், பாடகர்கள் என அனைவருமே இந்த விழாவில் பங்குகொண்டு கோலாகலமாக்கினார்கள்.ஆனால் விஜய்க்கு இது கடைசி படம் மற்றும் கடைசி படத்தின் இசை வெளியீட்டு விழா என்பதால் திரையுலகில் இருந்து பலரும் இந்த விழாவிற்கு வரவழைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டனர்.
ஆனால் அப்படி யாருமே வரவில்லை. ஆனால் அஜித் மலேசியாவில் தான் இருக்கிறார். ஒரு வேளை அஜித் விஜய் சந்திப்பு நடக்குமா என்றும் எதிர்பார்த்தனர். அதோடு விழாவிற்கு அஜித் வந்தால் நன்றாக இருக்குமே என்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் புலம்புவதையும் பார்க்க முடிந்தது. ஆனால் அதற்கு மாறாக அஜித் வராமலேயே நேற்று நடந்த இசை வெளியீட்டு விழாவில் அஜித் சம்பந்தப்பட்ட சில விஷயங்கள் நடந்தன.
ஜன நாயகன் படத்தின் இயக்குனர் எச்.வினோத். அதனால் அவரை பற்றி அறிமுகப்படுத்தும் போது எச்.வினோத் இயக்கிய முந்தைய படங்களை பற்றிய தொகுப்பு எல்.இ.டியில் திரையிடப்பட்டது. அதில் அஜித் படமான நேர்கொண்டபார்வை மற்றும் வலிமை போன்ற படங்களும் திரையிடப்பட்டன. அதற்கு அரங்கமே அதிர்ந்தது. அதோடு விஜய் பேசும் போதும் நண்பர் அஜித் என நேற்றும் கூறினார்.
இதற்கு முன் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசும் போது நண்பர் அஜித் மாதிரி கோட் போட்டு வந்திருக்கிறேன் என்று கூறினார். அதே போல் நேற்றும் மலேசியாவில் சில தமிழ் படங்கள் மிகவும் ஃபேமஸ். குறிப்பாக நண்பர் அஜித்தின் பில்லா என கூறினார். அதற்கு ஒட்டுமொத்த கூட்டமும் ஆர்ப்பறித்ததை பார்க்க முடிந்தது. எங்கு போனாலும் விஜய் அஜித்தை பற்றி பேசாமல் வருவதில்லை. இதன் மூலம் அஜித் ரசிகர்களை தன் பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வசப்படுத்த முயற்சி செய்து வருகிறார் விஜய்.
