நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியின் தலைவராக மாறிவிட்டார். இதுவரை அவரை திரையில் நடிகனாக மட்டுமே பார்த்த அவரின் ரசிகர்கள் தற்போது அவரை அரசியல்வாதியாக பார்த்து வருகிறார்கள். ஜனநாயகன் படத்தின் சூட்டிங் முடிந்த கையோடு விஜய் முழுநேர அரசியல்வாதியாக மாறியிருக்கிறார்.
முக்கிய விஷயங்களுக்கு அவரின் பெயரில் அறிக்கை வருகிறது. அவ்வப்போது பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டு பேசுகிறார். சமீபத்தில் கூட ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஆவேசமாக பேசினார் விஜய். குறிப்பாக ஆளும் கட்சியான திமுகவை தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் விஜய்.
அதிலும் திமுகவை தீய சக்தி என்றெல்லாம் பேசி வருகிறார். 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதை விஜயின் எண்ணமாக இருக்கிறது. அவர் நினைப்பது நடக்குமா என்பது தேர்தல் ரிசல்ட்டுக்கு பின்னரே தெரியவரும்.

இந்நிலையில், விஜயை வைத்து ஜனநாயகன் படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குனர் ஹெச்.வினோத் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் விஜயின் அரசியல் பிரவேசம் பற்றி பேசியிருக்கிறார். 4 விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். முட்டாள்கள் தனக்கும் தன்னை சுற்றி இருப்பவர்களுக்கும் எது நல்லது, எது கெட்டதுன்னு தெரியாதவர்கள். அறிவாளிகளுக்கு எது நல்லது எது கெட்டது என தெரியும்.
மூன்றாவது வகையான அறிவாளி அயோக்கியர்கள் எது நல்லதுன்னு வெளியில் சொல்லாமல் அதை தன்னுடைய சுயநலத்துக்காக மட்டுமே பயன்படுத்துவார்கள். நான்கவது ரகமான முட்டாள் அயோக்கியர்கள் அறிவாளி அயோக்கியர்களுக்கு அடியாள் மாதிரி செயல்பட்டு மோசமான விஷயங்களை செய்து கொண்டிருப்பார்கள். இந்த நாலு வகையான மனிதர்களை சமாளிச்சாலே போதும்.. விஜய் அரசியலில் ஜெயிச்சிடுவார் என நம்புகிறேன்’ என பேசியிருக்கிறார்.
