இறுதிச்சுற்று, சூரரைப்போற்று ஆகிய திரைப்படங்களை இயக்கி கவனம் ஈர்த்த சுதாகொங்கரா இயக்கியுள்ள திரைப்படம் பராசக்தி. 1960களில் தமிழகத்தில் இளைஞர்களிடையே எழுந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து இந்த படத்தின் கதை, திரைக்கதையை அவர் உருவாக்கியிருக்கிறார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ஜெயம் ரவி, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் கூட இந்த படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது

ஆனால், இந்த படத்திற்கு இதுவரை தணிக்கை வாரியம் சான்றிதழை கொடுக்கவில்லை. ஏனெனில் இந்த படம் ஹிந்தி எதிர்ப்பை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. அதோடு, மத்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்பது போல பல வசனங்கள் படத்தில் இடம் பெற்றிருக்கிறது.

ஏற்கனவே சொல்லப்பட்ட மாற்றங்களுடன் கூடுதலாக 15 காட்சிகளை நீக்குமாறு தணிக்கை வாரியம் உத்தரவிட்டிருக்கிறது. படைப்புரீதியாக இந்த மாற்றங்களை ஏற்க இயக்குனர் சுதா கொங்கரா மறுத்துவிட்டதால் மறுசீராய்வு குழுவை (Revision Committee) அணுக திட்டமிட்டுள்ளனர். இதன் காரணமாக படத்தின் வெளியீடு இரண்டு அல்லது மூன்று வாரம் கால தாமதம் ஆகும் என தெரிகிறது.

ஏற்கனவே ஜனநாயகன்பிடத்திற்கு இதேபோல தணிக்கை வாரியம் சான்றிதழ் கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறது. இன்று காலை அந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கொடுக்க வேண்டும் நீதிபதி உத்தரவிட்ட பின்னர் தணிக்கை வாரியம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. எனவே ஜனநாயகம் படம் எப்போது வெளியாகும் என்பது தெரியாத நிலையில் பராசக்தி படத்திற்கும் அதே சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. எனவே பராசக்தி குழு திட்டமிட்டபடி ஜனவரி 10ஆம் தேதியான நாளை படம் வெளியாகுமா என்பது கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.

பொங்கலுக்கு ஜனநாயகன் வாய்ப்பில்லை என்கிற நிலையில் பராசக்தியும் வராமல் போனால் இந்த பொங்கல் சினிமா ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.