
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ஜெயம் ரவி, ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் பராசக்தி. 1960களில் தமிழ்நாட்டில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பை பெற்றது.
ஜனநாயகன் படம் ஜனவரி 9ம் தேதியும், பராசக்தி ஜனவரி 10ம் தேதியும் வெளியாகும் என அறிவித்திருந்தார்கள். ஆனால் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை அதிகாரிகள் இதுவரை சான்றிதழ் கொடுக்கவில்லை. இது தொடர்பான வழக்கில் தணிக்கை அதிகாரிகள் சான்றிதழ் கொடுக்கவேண்டும் என தீர்ப்பளித்த நிலையில் தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்திருக்கிறது.
எனவே, அந்த படத்தின் ரிலீஸ் தள்ளி சென்று விட்டது. ஒருபக்கம் பராசக்தி திரைப்படத்திற்கும் சென்சார் சான்றிதழ் இதுவரை கொடுக்கப்படாமல் இருந்தது. ஏனெனில் இந்த படம் ஹிந்தி எதிர்ப்புக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் இருப்பதால் பல காட்சிகளை தணிக்கை வாரியம் நீக்க சொன்னதாகவும் அதற்கு இயக்குனர் சுதா கொங்காரா மறுத்ததாகவும் செய்திகள் வெளியானது.
எனவே, பராசக்தி படம் நாளை வெளியாகுமா என்கிற கேள்விக்குறி எழுந்தது. ஆனால் தற்போது பராசக்தி படத்திற்கு தணிக்கை துறை அதிகாரிகள் சான்றிதழ் கொடுத்திருப்பதால் திரைப்படம் நாளை வெளியாவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஜனநாயகம் திரைப்படம் நாளை வெளியாக வாய்ப்பில்லை என்பதால் பராசக்தி அதிகமான தியேட்டரில் வெளியாகும் என தெரிகிறது
பராசக்தி திரைப்படம் மொத்தம் 2 மணி நேரமும் 43 நிமிடமும் ஓடக்கூடிய திரைப்படமாக உருவாகியிருக்கிறது. இந்த படத்திற்கு U/A 16+ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது.