Parasakthi: முதல் பாதியை முடிச்சு விட்டாங்க! ‘பராசக்தி’யில் ரவிமோகனை கொண்டாடும் ரசிகர்கள்

பெரிய எதிர்பார்ப்பில் இருந்த பராசக்தி திரைப்படம் இன்று ரிலீஸாகியிருக்கின்றது. தணிக்கை சான்றிதழ் நேற்று வரை கொடுக்காமல் இருக்க ஜனநாயகன் படம் மாதிரியே பராசக்தி படமும் ரிலீஸாகாமல் போயிடுமோ என்றெல்லாம் யோசிக்க வைத்தது. ஆனால் எப்படியோ நேற்று தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்பட சொன்னமாதிரியே பராசக்தி படம் இன்று ரிலீஸாகியிருக்கின்றது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா போன்றோர் நடிப்பில் இன்று பராசக்தி படம் ரிலீஸாகியிருக்கின்றது. ஹிந்தி திணிப்பை எதிர்த்து உருவாகிய இந்தப் படத்திற்கு மத்திய அரசு எதுவும் எதிர்ப்பு தெரிவிக்குமோ?அல்லது தணிக்கை வாரியம் எதுவும் இடையூறு கொடுக்குமோ என்ற பீதியிலும் இருந்தார்கள். அதே போல் தணிக்கை வாரியத்தில் இருந்து 20 கட் செய்ய சொல்லி உத்தரவிட்டிருந்தது.

ஆரம்பத்தில் சுதா கொங்கரா அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். ஆனால் சொன்ன மாதிரியே சொன்ன கட்ஸ்-களை எல்லாம் செய்து மீண்டும் தணிக்கை வாரியத்திற்கு செல்ல நேற்று படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்.ஆனாலும் பராசக்தி படத்தின் மீதிருந்த ஹைப்பே போய்விட்டது. அதற்கு காரணம் ஜனநாயகன் திரைப்படம்தான். பொங்கல் ரிலீஸாக ஜன நாயகனுக்கும் பராசக்திக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது.

ஆனால் ஜன நாயகன் படத்திற்கு தொடர்ந்து பிரச்சினைகள் வர அதுவே அந்தப் படத்திற்கு பெரியளவில் புரோமோஷன் போல மாறிவிட்டது. பராசக்தி படத்தையே மறந்துவிட்டார்கள். ஏன், பிரபலங்களின் பார்வையும் ஜன நாயகன் படத்தின் மீதுதான் இருந்தது. இப்படிப்பட்ட சூழ் நிலையில்தான் பராசக்தி படம் ரிலீஸாகியிருக்கிறது. அதனால் பெரிய அளவில் ஹைப் இல்லை என்பது போல் இருக்கிறது.

இந்த நிலையில் படம் காலை ரிலீஸாகியிருக்கிறது. படம் பார்த்துவிட்டு ரசிகர்கள் ட்விட்டரில் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். படத்தின் முதல் பாதி மிகவும் சோர்வாக இருப்பதாக கூறி வருகிறார்கள். எடுத்ததும் அந்த காலகட்டத்திற்கு கதையை கொண்டு போய்விடுகிறார்கள். அதன் பிறகுதான் கதை சோர்வாக நகர்வதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அது பெரும்பாலான நேரத்தை எடுத்துக் கொள்வதாகவும் கூறுகிறார்கள். அதோடு லவ் டிரேக்கிலும் பாடல்கள் மூலமாக போரடிப்பதாகவும் கூறுகிறார்கள். இதையெல்லாம் தாண்டி சிவகார்த்திகேயன் நடிப்பை விட ரவிமோகன் நடிப்பு சிறப்பு என்றும் கூறி வருகிறார்கள்.