Parasakthi: படம் பார்க்கமாட்டோம்!.. கோபத்தில் விஜய் ஃபேன்ஸ்.. பராசக்தி கல்லா கட்டுமா?..

விஜயின் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ம் தேதி, சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் ஜனவரி 14ம்தேதி என ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென ஜனவரி 10ம் தேதியே பராசக்தி ரிலீஸ் என அறிவித்தார்கள். இதனால் விஜயுடன் சிவகார்த்திகேயன் மோதுகிறார் என்கிற கோபம் விஜய் ரசிகர்களுக்கு ஏற்பட்டது.

அதோடு, சிவகார்த்திகேயன் சொன்னாதால்தான் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. அவர் தன்னை விஜய்க்கு நிகரானவர் என காட்டிக்கொள்ள ஆசைப்படுகிறார் என சில சினிமா விமர்சர்கள் சொன்னார்கள். எனவே, விஜய் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை திட்ட துவங்கினார்கள்.

பராசக்தி இசை வெளியீட்டு விழாவில் இதற்கு பதில்சொன்ன சிவகார்த்திகேயன் ‘இது வியாபாரத்திற்காக தயாரிப்பாளர் எடுத்த முடிவு. விஜய் சாரின் கடைசிப் படத்தோடு மோதும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால், சூழ்நிலை அப்படி அமைந்துவிட்டது. இதுபற்றி விஜய் சாரிடமே சொல்லி அவர் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என சொல்லியதோடு எனக்கு வாழ்த்தும் தெரிவித்தார்’ என சொல்லியிருந்தார். ஆனால், விஜய் ரசிகர்கள் இதை ஏற்கவில்லை.

ஒருபக்கம் சென்சார் பிரச்சனையில் ஜனநாயகன் சிக்கியதால் அந்த படம் ஜனவரி 9ம் தேதியான நேற்று வெளியாகவில்லை. அதேநேரம், 25 மாற்றங்களுடன் பராசக்தி திரைப்படம் இன்று காலை வெளியானது. ஜனநாயகன் வெளியாகவில்லை என்கிற சோகம் மற்றும் சிவகார்த்திகேயன் மீது கோபத்தில் இருக்கும் விஜய் ரசிகர்கள் பராசக்தி படத்தை பார்க்கமாட்டோம் என சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். விஜய் ரசிகர்கள் பராசக்தி படத்தை புறக்கணித்தால் அந்த படம் கல்ல கட்டுமா என்கிற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.